Advertisement

ரேஷன் கார்டு இருந்தால் ரூ.50 ஆயிரம் கடன்!

Advertisement

Advertisement

சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடன் வழங்குவது குறித்து வங்கி நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை செய்தார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், தலைமைச் செயலாளர் சண்முகம், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக சிறு, குறு தொழில்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் விவசாயக் கடன்களை வங்கிகள் உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில் தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எனவும் அவர் உறுதியளித்தார்.

ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு சார்பாக அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்பட்டது. அதோடு விவசாயம், சிறு கடைகள், கட்டுமானம், தொழிற்சாலைகள் உள்பட பல்வேறு பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி வங்கிகள் உதவ வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார். மேலும் அவர் பொதுத் துறை வங்கி அதிகாரிகள் அரசின் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகள் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Advertisement

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக, குடும்ப அட்டை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 கடன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடையே பேசுகையில், ”தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களாக விலையில்லாமல் ரேஷனில் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அதோடு பல்வேறு நலவாரியத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 வரையில் உதவித் தொகை வழங்கியுள்ளது. தமிழக முதல்வரின் உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை கடன் பெறலாம். ரேஷன் கார்டு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் கடன் வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறினார்.

Advertisement
admin

Recent Posts

இந்தியன் 2-வுக்கு நெட்பிளிக்ஸ் வைத்த செக்!.. 65 கோடி போச்சே!.. புலம்பும் லைக்கா!…

சில படங்கள் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும். பெரிய இயக்குனர் இயக்க பெரிய நடிகர் ஹீரோவாக நடிப்பார். பெரிய நிறுவனம் தயாரிக்கும்.… Read More

3 months ago

Vinesh Phogat likely to be disqualified, to miss Paris Olympic medal

Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More

3 months ago

50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester

50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More

3 months ago

IBPS CRP RRBs XIII Recruitment 2024

 IBPS invites Online applications for the recruitment of 9995 Officers (Scale-I, II & III) and… Read More

5 months ago

How to apply Chief Minister health insurance card in tamil pmjay cmchis health insurance card apply

💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More

6 months ago

AIASL Chennai Recruitment 2024 422 Handyman Posts; Apply Now

AIASL Chennai invites applications for recruitment of 422 Utility Agent – Ramp Driver, Handyman/ Handywoman… Read More

6 months ago