அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை!
Anna University Recruitment 2020: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புரொபஷனல் அசிஸ்டெண்ட், கிளார்க் அசிஸ்டெண்ட், பியூன் பதவிகளுக்கு 3 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைழக்கழகத்தில் தினசரி ஊதியம் அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது தொடர்பாக டிசம்பர் 30 ஆம் தேதியிட்ட அறிவிக்கையின்படி, மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளது.
புரொபஷனல் அசிஸ்டெண்ட் III CSE/IT இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் CSE/IT பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதற்கு நாள் ஒன்றுக்கு 627 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.
பியூன் 2 காலியிடங்கள் உள்ளது. இதற்கு நாள் ஒன்றுக்கு 379 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், https://www.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து ஜனவரி 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படம், கல்விச்சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்று, வகுப்பு சான்றிதழ் ஆகியவை இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Director, Centre for Entrance Examinations, Anna University,
Chennai – 600 025
இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
Important link
NOTIFICATION 1 LINK: CLICK HERE
Notification 2 Link : Click Here
இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்! இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற… Read More
Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More
50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More
💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More
AIASL Chennai invites applications for recruitment of 422 Utility Agent – Ramp Driver, Handyman/ Handywoman… Read More
NBCC invites Online applications for the recruitment of 93 Junior Engineer (JE), Sr. Project Executive,… Read More