ஆய்வக உதவியாளர், காவலர் உட்பட அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 6000 பணியிடத்தை நிரப்ப அரசு முடிவு
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37,211 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இப்பள்ளிகளில் 48 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கல்வி கற்பிப்பதற்காக 2.3 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர்.
இந்நிலையில் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆய்வக உதவியாளர், தட்டச்சர், காவலர் உட்பட ஆசிரியரல்லாத காலிப் பணியிடங்களை நிரப்ப கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் தட்டச்சர், எழுத்தர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், காவலர், தோட்டப் பராமரிப்பாளர், துப்புரவாளர் உட்பட ஆசிரியர் அல்லாத பல்வேறு பணிகளில் 6 ஆயிரம் இடங்கள் வரை காலியாக உள்ளன. இவை நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருப்பதால் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது.
குறிப்பாக எழுத்துப் பணிகளை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் கற்பித்தல் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதேபோல், காவலர்கள் இல்லாததால் பள்ளி வளாகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
சமூக விரோதிகளால் இரவு நேரங்களில் கட்டிடங்கள் மற்றும் குழாய்களை சேதப்படுத்துதல் போன்ற சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன. துப்புரவு பணிகளுக்கு உள்ளாட்சி அமைப்பின் ஊழியர்களைக் கொண்டும், சில பள்ளிகளில் தற்காலிக ஊழியர்களைக் கொண்டும் சமாளிக்கின்றனர்.
எனவே, இப்பணிகளுக்கு பணியாளர்களை நியமிக்கக் கோரி அரசிடம் நீண்ட காலமாக கோரிக்கைவைக்கப்பட்டது. நிதிச்சுமை காரணமாக தாமதமான நிலையில், தற்போது அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து அனைத்துப் பள்ளிகளிலும் ஏற்கெனவே உள்ள காலியிடங்கள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் பணியாளர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகள் நிறைவடைந்ததும் பணியாளர்கள் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும்.
சென்னை: அரசு பள்ளிகளில், 5,000 ஆய்வக உதவியாளர்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 1980ல், 400 ஆய்வுக்கூட உதவியாளர் பணியிடங்களும், 81ல், 500 பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டன. அதன்பின், இப்பணியிடங்களில் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், 31 ஆண்டுகளுக்குப் பின், தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 544 ஆய்வக உதவியாளர் பணியிடமும், காலியாக உள்ள, 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களையும் நிரப்ப, இம்மாதம், 11ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
ஆய்வக உதவியாளர் பணிக்கு, 10ம் வகுப்பு, கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், பணி நியமனங்கள் நடந்தன. தற்போது, அனைத்து வகை பணி நியமனங்களும், போட்டித் தேர்வு அடிப்படையிலேயே நடந்து வருகின்றன. இதனால், ஆய்வக உதவியாளர் பணியிடங்களும், போட்டித்தேர்வு அடிப்படையில் நடைபெறுமா என, கேள்வி எழுந்தது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி வட்டாரம் கூறியதாவது: அமைச்சுப் பணியாளர்கள் நியமனம் மட்டுமே, தேர்வாணைய வரம்பிற்குள் வருவர். ஆய்வக உதவியாளர் பணி நியமனம், பொது சார்புப் பணிகளின் கீழ் வரும். எனவே, இந்த வகை பணி நியமனங்கள், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில்தான் நடக்கும். கல்வித்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களில், கல்வித்தகுதி வாய்ந்தவர்கள் இருந்தால், அவர்களுக்கு முதலில், ஆய்வக உதவியாளர் பதவி உயர்வு வழங்கப்படும்.
மீதமுள்ள பணியிடங்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப, மாவட்ட அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவர். இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்த முதல்வரின் அறிவிப்பை, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக்கூட உதவியாளர் சங்கம் வரவேற்றுள்ளது.
PM Kisan 20வது தவணை எப்போது வரும்? சிக்கல் இல்லாமல் பெற இதை செய்வது அவசியம் பிரதம மந்திரி கிசான்… Read More
கிராமந்தோறும் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் Read More
Bengaluru: In a country where loans have become the default path to own anything big—especially… Read More
Let Me Be Honest With You RRB NTPC Apply – 2025 | RRB NTPC Apply… Read More
TNCSC Thoothukudi has released the recruitment notification No: E1/07156/2021 Date: 11.07.2025 to fill the 300… Read More