நிறுவனம் | அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 04 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 25.09.2025 |
கடைசி தேதி | 25.10.2025 |
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. பதவி: அலுவலக உதவியாளர்
சம்பளம்: மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானதாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பதவி: சுயம்பாகி
சம்பளம்: மாதம் ரூ.13,200 முதல் ரூ.41,800 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் படிக்கவும் எழுதவும் அறிந்திருக்க வேண்டும். மற்றும் திருக்கோயிலின் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப நெய்வேத்திய மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். மற்றும் பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.
3. பதவி: காவலர்
சம்பளம்: மாதம் ரூ.10,000
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
4. பதவி: தோட்டவேலை
சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவம் மற்றும் நிபந்தனைகளை அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில் அலுவலகத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு பட்டினத்தாரர் திருக்கோயில், அலுவலக இருப்பு:- அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர் சென்னை-19 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25.10.2025 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
