சென்னை: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அல்லது EPFOஇந்தியாவில் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அமைப்பு பிஎப் தொடர்பான முக்கியமான விதி ஒன்றை வெளியிட்டு உள்ளது.
EPFO வாடிக்கையாளர்கள்/சந்தாதாரர்களுக்கு ஒரு முறையான ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தை வழங்குகிறது, இது வேலைக்குப் பிறகு நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது. ஆனால் சந்தாதாரர்கள் அறியாத சில EPFOவிதிகள் உள்ளன.
இந்த விதிகளில் ஒன்றுதான் 50 ஆயிரம் பலன் தரும் திட்டம். இந்த விதி மூலம் ஒரு ஊழியர் ரூ.50,000 வரை நேரடி பலன் பெறுகிறார், ஆனால் ஒரு நிபந்தனை உள்ளது. இந்த திட்டம் என்ன மற்றும் நிபந்தனை என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
பணம் உறுதி: அனைத்து PF கணக்கு வைத்திருப்பவர்களும் வேலை மாறிய பிறகும் அதே EPF கணக்கில் தொடர்ந்து பங்களிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தொடர்ந்து 20 வருடங்கள் ஒரே கணக்கில் பங்களித்த பிறகு, லாயல்டி-கம்-லைஃப் பலன்களைப் பெற அனுமதிக்கிறது
CBDT ஆனது, 20 ஆண்டுகளாக தங்கள் EPF கணக்கில் தொடர்ந்து பங்களித்து வரும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு லாயல்டி-கம்-லைஃப் நன்மையை நீட்டிக்க பரிந்துரைத்தது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது,20 ஆண்டுகளாக வழக்கமான பங்களிப்புகளைச் செய்த சந்தாதாரர்கள் ரூ. 50,000 கூடுதல் பலனைப் பெறுவார்கள்.
லாயல்டி-கம்-லைஃப் நன்மையின் கீழ், ரூ.5,000 வரை அடிப்படைச் சம்பளம் உள்ளவர்கள் ரூ.30,000 பலனைப் பெறுகிறார்கள். அடிப்படை சம்பளம் ரூ.5,001 முதல் ரூ.10,000 வரை உள்ளவர்களுக்கு ரூ.40,000 பலன் கிடைக்கும், மேலும் அடிப்படை சம்பளம் ரூ.10,000க்கு மேல் இருந்தால், ரூ.50000 பெறுவார்கள்.
EPFO சந்தாதாரர்கள் இந்த நன்மையைப் பெறுவதற்கான சிறந்த வழி, வேலைகளை மாற்றும் போது அதே EPF கணக்கைத் தொடர்வதுதான். இதற்கு, உங்களின் பழைய பணியமர்த்துபவர் மற்றும் தற்போது பணிபுரியும் நிறுவனத்திடம் தகவல் கொடுக்க வேண்டும்.
புதிய விதி: மத்திய அரசு, 1995ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) திருத்தம் கொண்டு உள்ளது. ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவையில் உள்ள ஊழியர்களுக்கு withdrawal benefits எனப்படும் திரும்பப் பெறும் பலன்களை வழங்குகிறது. பல்வேறு துறைகளில் பணிகளில் உள்ள சராசரியாக 7 லட்சம் பேருக்கும் அதிகமானோர் சந்தோசம் அடையும் வகையில் இபிஎப்ஓ விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.
நாடு முழுக்க உள்ள ஊழியர்களுக்கு இதற்கான செய்தியை மத்திய அரசு அனுப்பி உள்ளது. மத்திய அரசாங்க அறிக்கையின்படி, இந்தத் திருத்தம் ஆறு மாதங்களுக்கும் குறைவான பங்களிப்பு சேவையுடன் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு ஆனது. அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பின் வேலையை விட்டு வெளியேறும் 7 லட்சத்திற்கும் அதிகமான EPS உறுப்பினர்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்திற்கான சேவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதையும், வழங்கப்படும் சேவையின் விகிதத்தில் withdrawal benefits பலன்கள் வழங்கப்படுவதையும் உறுதிசெய்யும் வகையில், அட்டவணை D ஐயும் மத்திய அரசு மாற்றியுள்ளது. அட்டவணை D என்பது திட்டத்தின் தகுதிக்கு தேவையான சேவையை வழங்காத உறுப்பினர்கள் அல்லது 58 வயதை எட்டிய உறுப்பினர்களைக் குறிக்கிறது.
இப்போது திரும்பப் பெறக்கூடிய தொகையானது ஒரு உறுப்பினர் சேவையை முடித்த மாதங்கள் மற்றும் EPS பங்களிப்பு பெறப்பட்ட ஊதியத்தைப் பொறுத்தது.
முன்னதாக, திரும்பப் பெறும் பலன், முடிந்த ஆண்டுகளில் பங்களிப்பு சேவையின் காலம் மற்றும் EPS பங்களிப்பு செலுத்தப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. இதில் கட்டாய ஆறு மாத பங்களிப்பு சேவையும் அடங்கும். எனவே, ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட மாதங்கள் ஒரு வேலையில் பங்களிப்பு சேவையை முடித்த பிறகு, உறுப்பினர்களுக்கு பலன்கள் வழங்கப்பட்டன. ஆறு மாதங்களுக்கு முன் திட்டத்தில் இருந்து வெளியேறும் உறுப்பினர்களுக்கு பலன்கள் கிடைக்காது. ஆனால் இனிமேல் அப்படி கிடையாது.
ஒரு பணியில் இருந்து 6 மாதங்களுக்கு முன் விலகினால் கூட withdrawal benefits கிடைக்கும். புதிய சட்டப்படி ஆறு மாதங்களுக்கு முன் திட்டத்தில் இருந்து வெளியேறும் உறுப்பினர்களுக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் மாற்றப்பட்டு உள்ளன.
EPFO rules,
EPFO news in tamil,
EPFO latest news,
EPFO latest update,
प्रोविडेंट फंड,
पीएफ फंड,
पीएफ का पैसा,
Employee provident fund,
Basic salary,
Provident Fund,
EPFO News norms,
PF Withdrawal,
EPF Fund,
Double your PF,
PF latest news,
EPF news in Hindi,
EPFO,
EPF Subscribers,
EPF,
dls bhai,
dls,
trending,
prime minister,
headlines news,
dls_news,
2025,
new rules,
Great news for employees,
EPFO give bonus,
Rs 50 thousand,
Employees’ Provident Fund Organisation
dls news,
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு கொடுக்கப்போகும் டிசம்பர் பரிசு. முழு விவரம் தமிழ்நாடு அரசு முன்னாள்… Read More
Post Office RD 2025: The Post Office Recurring Deposit scheme continues to be one of… Read More
Gold Loan: கூட்டுறவு துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடனுதவிகள் தங்க நகை அடகின் பேரில் வழங்கப்பட்டு… Read More
'சென்யார்' புயல் கரையைக் கடக்கிறது: கனமழை காரணமாக தமிழக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை? ஐஎம்டியின் சமீபத்திய புதுப்பிப்பைப் பாருங்கள் Read More
When a superstar walks into politics, people usually expect big rallies and fiery speeches. Here,… Read More
மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More