பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு தகுதியான பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெண்களின் பெயரில் இலவச வீடு 2025 நிலம் வீடு இல்லாதவர்களுக்கு 2 மிக முக்கிய தகவல் free home scheme
Direct link of online free home apply : https://pmaymis.gov.in…
Pm free home scheme website link : https://pmaymis.gov.in/
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான நான்காவது ஆய்வுக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு விதமான திட்டங்கள் குறித்து பேசினார். அந்த வகையில் ஊரக குடியிருப்பு திட்டம் குறித்தும் பேசியுள்ளார்.
ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு விதமான திட்டங்களை பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வீடு கட்ட நிதியுதவி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் திமுக ஆட்சியில் ஊரக குடியிருப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள தகவலில் இந்த திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கான அலகுத் தொகையாக ரூ. 1,20,000 வழங்கப்படுகிறது. இதில் மாநில அரசு ரூ. 48,000 மற்றும் ஒன்றிய அரசு 72,000 ரூபாயும் வழங்குகிறது.
மேற்கூரை அமைப்பதற்காக கூடுதலாக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மாநில அரசு வழங்கி வருகிறது. 2021-2022 ஆண்டு வரை 3,61,591 வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் இதுவரை 3,43,958 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளை கட்டுவதற்கான பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் ஊரக குடியிருப்பு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.
வீடு கட்டுவற்கான கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் தொழிலாளர்களின் கூலி ஆகியவை கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளன. இதனால், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான அலகு தொகையினை குறைந்தபட்சம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமென்று கேட்டுள்ளோம்.
ஆனால், ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. ஒன்றிய அரசின் நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாலே, நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More