டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவித் தொகையாக ரூ.12000 ரூபாயிலிருந்து ரூ.18000 ரூபாய் வழங்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆணை வழங்கியுள்ளது.
இத்திட்டம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்றவற்றை குறைக்க காரணமாக இருந்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5 தவணை முறைகளில் ரூபாய் 18000 வழங்கப்படுகிறது. மேலும் ரூ.4000 மதிப்பிலான ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது.
| I தவணை | கர்ப்பமுற்று 12 வாரத்திற்குள் கிராம நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து பிக்மி எண் பெற்றவுடன் | 2000/- |
| பயன் | ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் மூன்றாம் மாத நிலையில் | 2000/- |
| II தவணை | நான்காம் மாதம் நிறைவடைவதற்குள் கர்ப்பகால மற்றும் இரத்த பரிசோதனைகள் அரசு மருத்துவமனைகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்திருந்தால். | 2000/- |
| பயன் | இரண்டாம் ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் | 2000/- |
| III தவணை | அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நிகழ்ந்தவுடன் | 4000/- |
| IV தவணை | குழந்தைகளுக்கு 3-ஆம் தவணை OPV/ROTA/PENTA VALENT தடுப்பூசிகள் போட்ட பிறகு | 4000/- |
| V தவணை | குழந்தைகளுக்கு 9 மாதம் (270 நாட்கள் முடிந்து) தடுப்பூசி போட்ட பிறகு | 2000/- |
| மொத்தம் | 18000/- |
| கர்ப்பிணி தாய்க்கான ஊட்டச்சத்து மாவு | 1 கி.கி. |
| இரும்புச் சத்து திரவம் 200 மி.லி. | 3 |
| உலர் பேரிச்சம் | 1 கி.கி. |
| புரதசத்து பிஸ்கட் | 500 கிராம் |
| ஆவின் நெய் | 500 கிராம் |
| அல்பெண்டசோல் பூச்சி மாத்திரை | 3 |
| துண்டு | 1 |
கர்ப்பிணித் தாய்மார்கள் கர்ப்பம் தெரிந்தவுடன் 12 வாரத்திற்குள் கிராம மற்றும் நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து RCH எண் பெற்று இருக்க வேண்டும். அல்லது 12 வாரத்திற்குள் முன் பதிவு செய்திருக்க வேண்டும்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர்கள் மற்றும் அனைத்து கிராம நகர சுகாதார செவிலியர்கள்
ஏழை கர்ப்பிணி தாய்மார்கள்
ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவி
Tamil Nadu Land Survey and Land Records Department Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு… Read More
SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More
TN PWD Recruitment 2026: தமிழ்நாடு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department – TN PWD) 2026 ஆம்… Read More
தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை: தமிழகத்தில் 214 முக்கிய கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இந்து… Read More
PMEGP / NEEDS SCHEME: 35% மானியம் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான கடனுதவிக்கு மத்திய அரசின் PMEGP (Prime… Read More
TVK 4000 Rupees Scheme Eligibility: வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்கும் திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான… Read More