Advertisement
PRIVATE JOBS

தமிழகத்தில் 4 புதிய தொழில் நிறுவனங்கள் முதலீடு சுமாா் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள்

தமிழகத்தில் நான்கு புதிய தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்யவுள்ளன. இதன்மூலம், சுமாா் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறும். தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நான்கு முக்கிய தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில்களைத் தொடங்குவதற்கான ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன.

நான்கு நிறுவனங்களும் மொத்தமாக ரூ.2,500 கோடி அளவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதலீடுகளைச் செய்யவுள்ளன.

எந்தெந்த நிறுவனங்கள்: சென்னையை அடுத்த காஞ்சிபுரம் அருகே டைசெல் காா்ப்பரேஷன் நிறுவனம் ரூ.900 கோடியில் முதலீடுகளைச் செய்கிறது. இதேபோன்று, காகித அட்டை உற்பத்தித் தயாரிப்பில் ஐ.டி.சி., நிறுவனம் ஈடுபடவுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் இதற்கான ஆலை அமைக்கப்படுகிறது. இந்த ஆலையானது ரூ.515 கோடியில் அமையவுள்ளது. இந்த ஆலையின் மூலமாக 330 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேலும், மின்சார வாகனங்கள் மற்றும் அதில் பயன்படுத்தக் கூடிய மின்கலன்களுக்கான உற்பத்தித் துறையில் ஏத்தா் எனா்ஜி பிரைவேட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் மின்சார வாகனம் மற்றும் மின்கல உற்பத்திக்காக ரூ.600 கோடி முதலீடு செய்யவுள்ளது. இந்த நிறுவனத்தின் முதலீடு காரணமாக, 2 ஆயிரத்து 925 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோன்று, திருவள்ளூா் மாவட்டம் தோவாய்கண்டிகையில் பிலிப்ஸ் நிறுவனத்தின் காா்பன் பிளாக் நிறுவனம் ரூ.600 கோடி முதலீடுகளைச் செய்யவுள்ளது. இந்த முதலீடுகள் காரணமாக சுமாா் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த நான்கு புதிய நிறுவனங்களின் முதலீடுகளால் தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

admin

Recent Posts

ssc cgl exam apply online 2025 tamil | how to apply ssc cgl 2025 in tamil | sc cgl form fill up 2025

The Staff Selection Commission (SSC) has officially uploaded the SSC Combined Graduate Level Notification 2025… Read More

2 weeks ago

மொத்த காலி பணியிடங்கள்: 227 சென்னையில்… ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு! – எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. (AAICLAS)என்ன… Read More

2 weeks ago

BREAKING | Gold Loan New Rules | RBI | தங்க நகை கடன் – RBIக்கு நிதி அமைச்சகம் பரிந்துரை

தமிழ்நாட்டின் போராட்டம் வெற்றி.. நகை அடகு விதிகளை.. நிறுத்தி வைக்க ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை சென்னை: நகைக் கடனுக்கான… Read More

4 weeks ago

10 வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை.. தமிழக அரசு மாதம் மாதம் தரும் உதவி தொகை.. விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை… Read More

4 weeks ago

Gold Loan: `உரிமையாளருக்கான ஆதாரம், தரச்சான்றிதழ்’ – தங்க நகைக்கடனுக்கு RBI அறிவித்த 9 புதிய விதிகள்

1. அடமானம் வைக்கும் தங்கம் நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும். அதாவது ரூ.1,000 மதிப்புள்ள… Read More

4 weeks ago

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு (மூத்த ஆட்கள் இல்லை)

மே 24, 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய சுழுக்கணி அறிவிப்பு (மூத்த ஆட்கள்) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள்… Read More

1 month ago