விவசாய மின்மோட்டார் பம்பு செட் வாங்க ரூ.15,000 மானியம்… விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இவைதான்!
பாசன வசதியை மேம்படுத்துவதில், சிறு, குறு விவசாயிகளின் நிதிச் சுமையை வெகுவாகக் குறைக்கும் நோக்கத்தில், மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.15,000/- மானியமாக வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
apply link : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdv6IYZZhEgMOykHGJTwMB-tz5tR76JpFixNenicKqlKgbNlg/viewform
பாசன வசதியை மேம்படுத்துவதில், சிறு, குறு விவசாயிகளின் நிதிச்சுமையை வெகுவாகக் குறைக்கும் நோக்கத்தில், மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000 மானியமாக வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வேளாண் துறை மூலம் 5,000 விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்பு செட் வாங்குவதற்கு ரூ.15,000 மானியம் வழங்கப்படுவதாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கடந்த இரு ஆண்டுகளாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கு புதிதாக நீர் ஆதாரங்களை உருவாக்குதல், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வேளாண் பம்பு செட்டுகளுக்கு புதிதாக இலவச மின் இணைப்பு, 25 லட்சத்துக்கும் அதிகமான வேளாண் பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காகத் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கீடு, மின் இணைப்பு இல்லாத விவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகளுக்கு மானியம், பாசன நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு, நுண்ணீர்ப் பாசன அமைப்புக்கு மானியம் போன்று பல்வேறு வகைகளில் இந்த அரசு உதவி வருகிறது.
மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்டுகள்
நடப்பு 2024-25 வேளாண் நிதிநிலை அறிக்கையில், ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் பொருத்தவும் ஒரு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.15,000 வீதம் 5,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
மானியம் வழங்க காரணம்…
பழைய, திறன்குறைந்த மின் மோட்டார் பம்பு செட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், மின்சாரப் பயன்பாடு அதிகமாவதோடு, பாசன நேரமும் அதிகரிக்கிறது. சாகுபடிக்கான செலவு அதிகரித்துவரும் வேளையில், சிறு, குறு விவசாயிகள் இத்தகைய பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றுவதற்கு தயங்குகிறார்கள். இத்தகைய விவசாயிகளின் நலனுக்காக, புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகளை வாங்குவதற்கு மானியம் வேளாண்மைப் பொறியியல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
மானிய விபரம்
பழைய பம்பு செட்டை மாற்றி, புதிய மின் மோட்டார் பம்பு செட் நிறுவுவதற்கும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிணறுக்கு புதிய மின் மோட்டார் பம்பு செட் வாங்குவதற்கும் இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More
கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More
ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. ரூ. 10 லட்சம் கடன் கிடைக்கும்.. உங்களுக்கும் வேண்டுமா?உங்களுடைய ஆதார் கார்டு இருந்தால் போதும்..… Read More