Advertisement
Service

தமிழக அரசு தரும் இலவச பட்டா பெற விண்ணப்பிப்பது எப்படி ? ரூல்ஸ் தெரிந்தால் இப்போது சூப்பர் வாய்ப்பு

சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள் எத்தனை வருடம் குடியிருந்தாலும், அந்த சிலம் ஆட்சேபணை இல்லாத நிலம் என்றால் மட்டுமே பட்டா தரும். அரசு தற்போது 86000 பேருக்கு பட்டா வழங்க போகிறது. எனவே இதுபற்றி விதிமுறைகளை முழுமையாக அறிந்தால் பட்டா வாங்குவது எளிதாக இருக்கும்..

இந்தியாவிலேயே மிக வேகமாக நகரமயமாகும் மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது. இதன் காரணமாக சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், வேலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், ஈரோடு, நாமக்கல், ஓசூர், கரூர் என தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள நகரங்களில் ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறக்கிறது. மக்கள் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி குடியேறுவதை அதிகம் விரும்புகிறார்கள். அப்படி குடியேறுவதன் காரணமாக நகரங்களில் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இப்போது எல்லா நகரங்களிலும் லட்சங்களில் தான் நிலத்தின் மதிப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கோடிகளில் நிலத்தின் மதிப்பு உயருகிறது.

ஏழைகளுக்கு பட்டா தரும் அரசு
அதேநேரம் புலம் பெயர்ந்து வரும் கூலி தொழிலாளர்கள், ஏழை மக்கள் பலருக்கு இன்றைக்கு வீடு, நிலம் சொந்தமாக இல்லை.. அதேபோல் அவர்களால் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து இடம் வாங்குவது என்பது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாத்தியமில்லை. மற்ற பகுதிகளிலும் இடம்வாங்குவதும் சரி, வீடு கட்டுவதும் சரி மிகவும் கடினமாகே உள்ளது. 30 வருடம், 40 வருடம் முனபு சென்னை உள்பட பல்வேறு நகர்ப்புறங்களில் புறம்போக்கு நிலங்களில் குடியேறிய ஏழை மக்கள்,அந்த நிலங்களுக்கு பட்டா வாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டாக்களை ஏழைகளுக்கு அவ்வப்போது வழங்கிவருகிறது.

புள்ளி விவரங்கள் என்ன
புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்கு, இலவச மனைப்பட்டா வழங்கும் திட்டம் கடந்த 2006ம் ஆணடு தொடங்கி தமிழகத்தில் நடைமுறையில் இருக்கிறது. இதன்படி அரசு துறைகளுக்கு ஆட்சேபனை இல்லாத, நீர் நிலைகள் அல்லாத நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு, 2 சென்ட் வரை இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆண்டு வரை, 4.37 லட்சம் பேருக்கு, வருவாய் துறை சார்பில், இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டிருக்கிறது.

இலவச வீட்டு மனை பட்டா பெறுவது எப்படி
பொதுவாக ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலான குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதை அரசு வழங்கமாக வைத்துள்ளது. அதேநேரம் நீர்நிலைகள், கால்வாய்கள், சாலைகள், கோயில் நிலங்கள் போன்ற ஆட்சேபகரமான ஆக்கிரமிப்பு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு எந்த காலத்திலும் பட்டா வழங்கப்படுவது இல்லை. அவர்களுக்கு அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் குடியிருப்புகளை கட்டி, அரசு குடியமர்த்துகிறது. கண்ணகி நகர், செம்மஞ்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் கட்டப்படும் அடுக்குமாடியில் அவர்கள் குடியேற்றம் செய்யப்படுகிறார்கள்.

யார் விண்ணப்பிக்கலாம்

அதேநேரம் ஆட்சேபனை அற்ற நத்தம் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக வசிப்பவர்கள் வீட்டு மனை பட்டா பெற விண்ணப்பிக்க முடியும். ஆனால் பட்டா பெற விண்ணப்பிப்பவர் பெயரில் எந்த வீட்டு மனையும் இருக்கக்கூடாது. பட்டா வாங்க விரும்புவோர் பெயரில் எந்த சொத்தும் இருக்கக்கூடாது. அத்துடன் ஆக்கிரமித்து குடியிருக்கும் இடத்திற்கான எல்லா ஆவணங்களும் இருக்க வேண்டும்.

இலவச வீட்டு மனை பட்டா பெற தேவையான ஆவணங்கள்
முதல் தகுதி என்னவென்றால் வேறு நிலபுலன் மனை வீடுகள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் ஏதும் இல்லாமல் இருப்பதுதான் முதல் தகுதியாகும். அடுத்ததாக குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு.. வருமானச்சான்று.. கோட்டா முறையில் பெற சாதி சான்று (குறிப்பிட்ட சாதியினருக்கு வழங்கப்பட்ட நிலங்கள்) உள்பட விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும். எந்த பகுதியில் குடியிருப்புக்கு ஏற்ற அரசு நத்தம் புறம்போக்கு உள்ளது என்பதை அறிந்து அந்த பகுதியை குறிப்பிட்டு மனு அளிக்கலாம். மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு போன்றவற்றிற்கும் மனு அளிக்கலாம்.

அரசு தற்போது 86000 பேருக்கு பட்டா வழங்க போகிறது. அதன் விவரங்களையும் பார்ப்போம். அரசின் அரசாணையின் படி, “சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 10 வருடங்களுக்கு மேலாக ஆட்சேபனையற்ற நிலங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கலாம். மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு 5 ஆண்டுகள் வசித்தால் வழங்கலாம்.

பட்டா பெற வாய்ப்பு உள்ள நிலங்கள்
அதில் ஆட்சேபனை இல்லாத அரசு நிலங்களாக மதிப்பிடப்பட்ட மற்றும் மதிப்பீடு செய்யாத நிலங்கள், கல்லாங்குழி-பாறை-கரடு நிலங்கள், கிராம நத்தம், அரசு நஞ்சை-புஞ்சை நிலங்கள், எதிர்ப்புகள் இல்லாத சிறப்பு அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.

பட்டா கிடைக்காத நிலங்கள்

ஆனால் சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான நீர்நிலைகள், மேட்டு நிலங்கள், மேய்ச்சல்-மேய்க்கால், மந்தவெளி நிலங்கள், காடு நிலங்கள், ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசுக்கு சொந்தமான நிலங்கள், அனைத்து மத நிறுவனங்களின் பெயரில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் கோவில் புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றுக்கு பட்டா வழக்கப்படாது. பட்டா பெறும் பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ரூ.3 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால், அவர்களிடம் இருந்து நிலத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

பட்டா பெறுவோருக்கு எவ்வளவு இடம் கிடைக்கும்.
இந்த பட்டா வழங்கும் பணிக்காக மாவட்ட மற்றும் மாநில அளவில் குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் அதிகபட்சமாக 1 சென்ட் பட்டா வழங்க வேண்டும். பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் அதிகபட்சமாக 2 செண்டும். கிராமப்புறங்களில் 3 செண்டும் வழங்கப்பட வேண்டும் என்று அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பட்டா விஷயத்தில் அறிய வேண்டிய இன்னொரு முக்கியமான சிக்கல்
சென்னை போன்ற பகுதிகளில் உள்ள நீர் நிலை பகுதிகளில் வசிப்போருக்கு அரசு எந்த காலத்திலும் பட்டா தராது. அதேபோல் அனாதீனம், வண்டிப்பாதை நீர் வழிப்பாதை, வாய்க்கால், கோயில் நிலங்கள், அறநிலைத்துறை நிலங்கள் போன்ற நிலங்களுக்கு முன்பு பட்டா தராது என்பதால், அதுபோன்ற நிலங்களை யாராவது வாங்கியிருந்து உங்களிடம் விற்க முயன்றால், தப்பி தவறி கூட வாங்கி விட வேண்டாம். அப்படிப்பட்ட நிலங்களின் மதிப்பு இப்போது பூஜியம் என்று அரசு மாற்றி வைத்துள்ளது. எனவே நில விஷயத்தில் கவனமாக இருங்கள்.

admin

Recent Posts

Madras High Court Recruitment 2025

Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More

2 weeks ago

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வுதமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More

3 weeks ago

1,300 ஊராட்சி செயலா் காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்: அமைச்சா்

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More

4 weeks ago

அசல் பத்திரம்.. ஆவணம் தொலைந்தாலும் பத்திரப்பதிவு.. நீதிமன்றத்துக்கு பெயிரா நன்றி.. அரசுக்கு கோரிக்கை

சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More

4 weeks ago

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் – ஆர்பிஐ அதிரடி

Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More

1 month ago

முதல்வரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம்’ – பயனாளிகள் தேர்வுக்கு வழிகாட்டுதல்கள் என்னென்ன?

சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டிக் கொடுத்து பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு… Read More

1 month ago