இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தின் கீழ் இயங்கும் அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்த முழு விவரம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மத்திய அரசு பாதுகாப்புத் துறையில் பல்வேறு துறை வேலைவாய்ப்பு தகவல்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏகப்பட்ட இளைஞர்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்து இருக்கின்றனர். பல முன்னணி தொழில் நிறுவங்களும் புதிதாக ஆட்களை நியமிப்பதில்லை. அது மட்டுமில்லாமல் அரசு பணிகளுக்கான தேர்வுகளும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால் பலர் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தின் கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பணி : Staff Car Driver (Ordinary Grade)
சம்பளம்: ரூ.18,000 – ரூ.62,000
வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்
தகுதி : லைட் மற்றும் ஹெவி டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் அனுபவம் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Manager, Mail Motor service, Goods shed Road, Coimbatore 641001
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்: 10.03.2022
மேலும் இந்த காலிப்பணியிடங்கள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.indiapost.gov.in/
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More