கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த திட்டம் அளிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 14.35 கோடி பேர் செயலில் உள்ள தொழிலாளர்களாகஉள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 17 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 319 ஆக இருந்த 100 நாள் வேலை திட்ட ஊதியம் தற்போது ரூ.336 ஆக அதிகரித்து வழங்கப்படும் என்றும், வருகிற 1-ம் தேதி (ஏப்ரல்) முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக அரியானாவில் ரூ.26 உயர்த்தப்பட்டு ரூ.400ஆக 100 நாள் திட்ட ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More
Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More