கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புகள் பெறும் வகையில், மத்திய அரசு பிரதமர் பயிற்சி திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் தொழிற்பயிற்சி பெற்று துறை ரீதியான அனுபவத்தை பெற முடியும். மேலும், இத்திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. அதன்படி, வரும் மார்ச் 12-ம் தேதி வரை இதற்காக விண்ணப்பிக்கலாம்.
கல்லூரி படிப்பை முடித்தவரா நீங்கள், வேலைக்கான திறனை நேரடியாக வளர்த்துகொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை அளித்து முன்னணி நிறுவனங்களில் மத்திய அரசு தொழிற்பயிற்சி வாய்ப்பை அளிக்கிறது. இந்த திட்டம் 2024-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் வரும் மார்ச் 12-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக பெறப்படுகிறது.
பிரதமர் தொழிற்பயிற்சி திட்டம் 2025
கல்லூரி படிப்பை முடித்து வரும் இளைஞர்களுக்கு வேலைக்கான திறன்களை வளர்த்துகொள்ளும் வகையிலும், தற்கால தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொள்ளவும் உதவும் வகையில், மத்திய அரசு ”பிரதமர் தொழிற்பயிற்சி திட்டம்” என்ற திட்ட்டத்தை 2024-25 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அறிவித்தது. இந்த திட்டம் மூலம் 500 முன்னணி நிறுவனங்களில் 12 மாதங்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும். 5 வருடங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2024-25 ஆண்டில் 1.25 லட்சம் இளைஞர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தர திட்டமிடப்பட்டுள்ளது.
நவம்பரில் பெறப்பட்ட முதல் கட்ட விண்ணப்பம்
2024-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை முதல் கட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 6 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்தனர்.
இரண்டாம் கட்ட விண்ணப்பம்
இந்நிலையில், இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி, https://pminternship.mca.gov.in/login/ என்ற இணையதளத்தில் மார்ச் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த கட்டத்தில் 730 மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் தொழிற்பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?
இத்திட்டம் மூலம் முன்னணி நிறுவனங்களில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாணவர்களின் வயது 21 முதல் 24 வரை இருக்க வேண்டும்.
பள்ளி படிப்பை முடித்தவர்கள், ஐடிஐ படித்தவர்கள், பாலிடெக்னிக், டிப்ளமோ, இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
முழு நேர ஊழியராக இருக்கக் கூடாது. அரசு ஊழியர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது.
அதே போன்று, IITs, IIMs, தேசிய சட்ட பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயரிய கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது.
CA/CMA முடித்தவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கக் கூடாது.
குடும்ப வருமானம் வருடத்திற்கு ரூ.8 லட்சத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது.
12 மாதத்திற்கு தொழிற்பயிற்சி
தேர்வு செய்யப்படும் நிறுவனங்களில் 12 மாதங்கள் அதாவது 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும்.
இதில் குறைந்தது 6 மாதங்கள் நேரடி பணி அனுபவம் பெறும் படி பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலம் முடிந்த பின்னர் இதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
மாதம் ரூ.5,000 உதவித்தொகை
இத்திட்டத்தின் நிறுவனங்களில் தொழிற்பயிற்சியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகையாக அளிக்கப்படும்.
இதில் ரூ.4,500 அரசு தரப்பில் இருந்து, ரூ.500 நிறுவனம் மூலமாகவும் அளிக்கப்படும். கூடுதலாக ரூ.6,000 பயிற்சி காலத்தில் ஒரு முறை மட்டும் அளிக்கப்படும்
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More
கிரெடிட் கார்டுகள் மூலம் MSME-களுக்கு கடன்கள்; யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில்,… Read More
ஆதார் கார்டு இருந்தாலே போதும்.. ரூ. 10 லட்சம் கடன் கிடைக்கும்.. உங்களுக்கும் வேண்டுமா?உங்களுடைய ஆதார் கார்டு இருந்தால் போதும்..… Read More
சென்னை: தமிழ்நாடு முழுக்க; நகர பகுதிகளில் 86 ஆயிரம் பட்டாக்களை 6 மாத காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று… Read More