பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதியுதவியை 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நிதியமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
2025 பட்ஜெட்டுக்கு முன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் விவசாயிகள் பிரதிநிதிகள் பல முக்கியமான விஷயங்களை நேற்று (டிசம்பர் 7) விவாதித்தனர். இந்தக் கூட்டத்தின் போது, நிதியமைச்சருடனான உரையாடலில் விவசாயிகளின் பிரதிநிதிகள், மலிவான நீண்ட கால கடன்களை வழங்கவும், குறைந்த வரி விதிக்கவும், பிஎம் கிசான் சம்மன் நிதியை இரட்டிப்பாக்கவும் அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
விவசாயிகள் பிரதிநிதிகளுடன் 2 மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் விவசாயத் துறையில் உள்ள பல்வேறு சவால்களைத் தீர்க்கும் நோக்கில் முன்மொழிவுகள் விரிவாக விவாதிக்கப்பட்டன.நிதி நிவாரணம், சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் மூலோபாய முதலீடுகளில் கவனம் செலுத்துவது ஆகியவை இக்கூட்டத்தில் இடம்பெற்ற முக்கிய கோரிக்கைகள் ஆகும். பாரத் கிரிஷக் சமாஜ் தலைவர் அஜய் வீர் ஜாகர் விவசாய உற்பத்தி மற்றும் விவசாயிகளின் நலனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை நிதியமைச்சரிடம் வலியுறுத்தினார்.
விவசாயக் கடனுக்கான வட்டி வீதத்தை 1 வீதமாகக் குறைத்தல் மற்றும் பிஎம் கிசான் சம்மன் நிதியின் தவணையை 6000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பாரதீய கிசான் யூனியன் (BKU) தலைவர் தர்மேந்திர மாலிக், நில வாடகை, விவசாயக் கூலி மற்றும் அறுவடைக்குப் பிந்தைய செலவுகளைச் சேர்த்துக் கோரி, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) பொறிமுறையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். விவசாய இயந்திரங்களின் விலையை நிறுவனத்தின் இணையதளங்களில் காட்ட வேண்டும், மண்டி உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், 23 பொருட்களுக்கு மேல் எம்எஸ்பி கவரேஜை விரிவுபடுத்த வேண்டும், எம்எஸ்பி அளவை விட குறைவான இறக்குமதியை அனுமதிக்கக் கூடாது, அவசரகாலத்தில் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More
சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More
Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More
சென்னை: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டிக் கொடுத்து பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு… Read More