இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை செயலகத்தின் அருங்காட்சியகம் சேவையில் காலியாக உள்ள உதவியாளர், பாதுகாப்பு உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 03
பணி: Curatorial Assistant – 01
கல்வித்தகுதி:
கியூரேட்டோரியல் உதவியாளர் பணிக்கு
விண்ணப்பிக்க விரும்புவோர் வரலாறு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதில் தற்கால இந்திய வரலாறு படித்திருக்க வேண்டும் அல்லது வரலாறு இளங்கலை பட்டம் அல்லது மியூசியாலாஜி பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஒரு ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். முதுகலை பெற்றவராக இருந்தால் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Conservation Assistant – 01
கல்வித்தகுதி:
வேதியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்று சம்பந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant – 01
கல்வித்தகுதி:
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதோடு 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
மூன்று பணிகளுக்குமே ஓரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாதம் ரூ. 44,900 -1,42,400
வயது வரம்பு:
அதிகபட்சமாக 27 வயதிற்குட்பட்டிருக்க இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
http://loksabhadocs.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE RECRUITMENT BRANCH,
LOK SABHA SECRETARIAT ROOM NO. 521,
PARLIAMENT HOUSE ANNEXE,
NEW DELHI-110001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.12.2019
IMPORTANT LINKS
Notification Click Here
Application Link Click Here
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More
ICMR RECRUITMENT 2025 Read More