Advertisement
GOVT JOBS

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு!

UPSC Notification 2020: UPSC தேர்வாணையம் சிவில் சர்வீஸ் தேர்வு UPSC IAS Civil Service அறிவிப்பானையை வெளியிட்டுள்ளது.



நடப்பு ஆண்டிற்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதனிலைத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு www.upsc.gov.in இணையதளத்தில் தொடங்கியுள்ளது.

Union Public Service Commission (UPSC) எனப்படும் யுபிஎஸ்சி தேர்வாணையம், நடப்பு 2020 ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வை அறிவித்துள்ளது. IAS / IPS / IFS / MISC அதிகாரி பதவி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள், முதனிலைத் தேர்வுக்கு (UPSC Civil Services Prelims 2020) விண்ணப்பிக்கலாம்.

மின்வாரியம் TNEB TANGEDCO வில் உதவியாளர் பணிக்கான விண்ணப்பப்பதிவு தொடக்கம்!

முக்கிய செய்தி: TNPSC Group 4 Exam 2019 காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

முக்கிய நாட்கள்:
அறிவிக்கை வெளியான நாள்: 12 பிப்ரவரி 2020
விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள்: 12 பிப்ரவரி 2020

விண்ணப்பப்பதிவு முடியும் நாள்: 3 மார்ச் 2020
UPSC Admit Card 2020 வெளியாகும் நாள்: உத்தேசமாக ஏப்ரல் 2020
UPSC Civil Services Prelims 2020 தேர்வு நடைபெறும் நாள்: 31 மே 2020
UPSC Civil Services Mains 2020 தேர்வு நடைபெறும் நாள்: 18 செப்டம்பர் 2020

சிவில் சர்வீஸ் பணி தேர்வுக்கு மொத்தம் 796 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

மொத்தம் மூன்று கட்டங்களாக UPSC IAS Civil Services 2020 தேர்வு நடைபெறுகிறது. அவை, முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகும். விண்ணப்பதாரர்கள் இதில் பெறும் மதிப்பெண்கள் வைத்து, இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

ஐஏஎஸ் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள், https://www.upsc.gov.in ் அல்லது https://upsconline.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு மத்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வாணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கவும்.

Important Link

Notification 2020 PDF

UPSC NOTIFICATION






admin

Recent Posts

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

4 weeks ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

1 month ago

சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – யாரெல்லாம் பயன்பெறலாம்? Amazing announcement by the Tamil Nadu government – who can benefit?

சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More

1 month ago