சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவில் இருந்து விப்ரோவில் பிசிஏ, பிஎஸ்சி படிப்பை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு சேரும்போதே ஜாயினிங் போனஸாக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாகும்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies). இந்த நிறுவனத்தில் இருந்து அவ்வப்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது விப்ரோவில் Wipro’s Work Integrated Learning Program (WILP) 2024 and 2025 என்ற பெயரில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். பிசிஏ, பிஎஸ்சி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணிதம், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இயற்பியல் உள்ளிட்ட படிப்புகளை 2024, 2025ம் ஆண்டுகளில் முடித்திருக்க வேண்டும்.
மேலும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 படிப்புக்கு பிறகு டிகிரி படிப்பை 60 சதவீத மதிப்பெண் அல்லது 6.0 CGPA என்று முடித்திருக்க வேண்டும். இதுதவிர சில கண்டிஷன்கள் உள்ளன. அதாவது டிகிரி படிப்பை கண்டிப்பாக கல்லூரியில் படித்திருக்க வேண்டும். 10, பிளஸ் 2 படிப்பை வேண்டுமானால் தொலைதூர கல்வி மூலம் படித்திருக்கலாம். ஒரு அரியர் இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் பணிக்கு தேர்வாவதற்குள் அதனை முடித்திருக்க வேண்டும்.
அதேபோல் டிகிரி படிப்பின்போது கண்டிப்பாக ஒரு பாடத்தை Core Mathematics-ஆக படித்திருக்க வேண்டும். Business Maths & Applied Matheatics பாடங்கள் இதில் வராது. பள்ளி படிப்பில் இடைவெளி என்பது இருக்கலாம். ஆனால் கல்லூரி படிப்பில் இடைவெளி என்பது இருக்க கூடாது.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஜாயினிங் போனஸாக (Joining Bonus) ஆக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். சம்பளம் என்பது Stipend முறையில் வழங்கப்பட உள்ளது. அதன்படி முதல் ஆண்டு Stipend ஆக ரூ.15,488 வழங்கப்படும். 2வது ஆண்டு ரூ.17,553, மூன்றாவது ஆண்டு ரூ.19,618, 4வது ஆண்டு ரூ.23 ஆயிரம் வரை வழங்கப்படும். எம்டெக் படிப்பை படிக்க வாய்ப்பு என்பது வழங்கப்படும்.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் 60 மாதம் சர்வீஸ் (5 ஆண்டு) அக்ரிமென்ட் செய்து கொள்ள வேண்டும். இதனால் பணியை விட்டு 5 ஆண்டுக்குள் நிற்கும்போது அவர்கள் கட்டாயம் விப்ரோ நிறுவனத்துக்கு Joining Bonus on Pro Rata basis-ல் திரும்ப செலுத்த வேண்டும்.
இது ஒரு PAN India பணியாகும். இதனால்நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விப்ரோவின் இணையதளம் சென்று செப்டம்பர் மாதம் 30ம் தேதி நள்ளிரவு 1.59 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் 3 ரவுண்ட்டுகள் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முதல் ரவுண்ட்டின் பெயர் Online Assessment. இதில் Verbal-ல் 20 கேள்வி, Analytical-ல் 20 கேள்வி, Quantitative-ல் 20 கேள்விகள் கேட்கப்படும். மேலும் Written Communication-ல் 20 நிமிடங்கள் வரை நடைபெறும். ரவுண்ட் 2வில் பிசினஸ் டிஸ்கசன், ரவண்ட் 3ல் எச்ஆர் டிஸ்கஷன் இருக்கும். இந்த 3 ரவுண்ட்டிலும் செலக்ட் ஆவோர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More
வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More
The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More
நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More