Advertisement
Categories: Service

விரைவில் நற்செய்தி! பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய் குறையும்!

விரைவில் நற்செய்தி! பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய் குறையும்!

முழுவதும் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் அறிவித்தார். அதாவது கணிசமான அளவில…

மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருக்கும் நற்செய்தியால் மக்களை மகிழ்ச்சி கடலில் மிதக்க விட்டிருக்கிறது. அந்த நற்செய்தி என்னவென்றால், பெட்ரோல் விலை ரூ.20 குறையும் என அறிவிக்கப்பட்டு இருப்பது தான். பெட்ரோல் விலை குறைப்பு குறித்த தகவல்களை பார்ப்போம்.

பெட்ரோல் விலை ரூ.20 குறையும் என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தது குடிமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

பெட்ரோல் விலை குறைப்பு எப்பொழுது அமலுக்கு வரும்?

எப்போதிலிருந்து இந்த பெட்ரோல் விலை குறைப்பு அமுலுக்கு வரும் என்பது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் விலை ரூ.20 குறையும்

மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், “எத்தனால் கலந்த பெட்ரோல் நாடு முழுவதும் கிடைக்கும். இது கணிசமான விலை குறைவதற்கு வழிவகுக்கும். இந்த பெட்ரோல் விரைவில் பெட்ரோல் பம்புகளில் கிடைக்கும். இதன் விலை 20 ரூபாய் குறைவாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

எத்தனாலில் இயங்கும் கார்

டொயோட்டா ஏற்கனவே எத்தனாலில் இயங்கும் காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் எரிபொருள் விலை லிட்டருக்கு வெறும் 25 ரூபாய். மேலும் எத்தனால் இயங்கும் வாகனங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.

பெட்ரோல் செலவு குறையும்

ஃப்ளெக்ஸ் எரிபொருள் ஒரு மாற்று எரிபொருள். இது பெட்ரோலுடன் எத்தனால் அல்லது மெத்தனால் கலந்து தயாரிக்கப்படுகிறது. இது பெட்ரோல் செலவை பெருமளவு குறைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலை குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

பெட்ரோல்-டீசல் தேவை குறையும்

2030 ஆம் ஆண்டுக்குள் 20% எத்தனாலை பெட்ரோலுடன் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உ’ள்ளது. இது பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை கணிசமாகக் குறைக்கும்.

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

1 week ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

2 weeks ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

1 month ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

2 months ago