3 ஆண்டுகளில் லட்சாதிபதி ஆகலாம்! ரூ. 1 லட்சம் பெற மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
இந்தத் திட்டத்தின் பெயர் ‘வீடுதோறும் லட்சாதிபதி’. பெயரில் உள்ளதுப்போல, ‘ஒவ்வொரு வீட்டிலும் லட்சாதிபதியை உருவாக்க வேண்டும்’ என்பது இந்தத் திட்டத்தின் நோக்கம். இது ஒரு ரெக்கரிங் டெபாசிட் திட்டம் ஆகும். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையைக் கட்டி வருவோம்…திட்டட்தின் முடிவில் லட்சங்கள் நம் கையில் இருக்கும். இது தான் இந்தத் திட்டத்தின் கான்செப்ட்.
யார் யார் சேரலாம்?
இந்தத் திட்டத்தில் 10 வயது முதலே சேரலாம்.
எத்தனை ஆண்டுகள்?
3 – 10 ஆண்டுகள். ஆண்டுகளை பொறுத்து மாதா மாதம் செலுத்த வேண்டிய தொகை மாறுபடும்.
வட்டி எவ்வளவு?
60 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 6.75 சதவிகிதம் வட்டி கிடைக்கும்; 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 7 சதவிகிதம் வட்டி கிடைக்கும்.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமே ‘கூட்டு வட்டி’. ஒவ்வொரு காலாண்டுகளில் கூட்டு வட்டி கணக்கிடப்படும். உதாரணமாக, மாதம் ரூ.600 கட்டி வருகிறோம் என்று வைத்துக்கொள்வோம். மூன்று மாதங்களில் இந்தத் தொகை ரூ. 1,800 ஆக சேர்ந்திருக்கும். ஆக, மூன்று மாதங்களுக்கு பிறகு, நாம் கட்டும் தொகையான ரூ.600-க்கு வட்டி இல்லாமல், ரூ.1,800-க்கு வட்டி தரப்படும். இது தான் கூட்டு வட்டி.
முன்னதாக பணம் எடுத்தால்…
ஒருவேளை முதிர்வு காலத்திற்கு முன்னரே பணத்தை எடுத்தால் நமக்கு கிடைக்கக்கூடிய பணத்தில் 0.50 – 1 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்.
ரூ.5 லட்சத்திற்குள் நமது திட்ட தொகை இருந்தால் முன்னதாக பணம் எடுக்கும்போது நாம் கட்டிய தொகையில் 0.50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்.
ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் நாம் கட்டிய தொகையில் 1 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் முக்கியப் பகுதி இதோ…
ஒருவர் மாதா மாதம்…
10 ஆண்டுகளுக்கு ரூ.593,
9 ஆண்டுகளுக்கு ரூ.682,
8 ஆண்டுகளுக்கு ரூ.795,
7 ஆண்டுகளுக்கு ரூ.940,
6 ஆண்டுகளுக்கு ரூ.1,135,
5 ஆண்டுகளுக்கு ரூ.1,409,
4 ஆண்டுகளுக்கு ரூ.1,812 அல்லது
3 ஆண்டுகளுக்கு ரூ.2,502
கட்டினால் திட்டத்தின் இறுதியில் ரூ.1 லட்சம் கிடைக்கும்.
இந்தக் கட்டணத்தொகையை இன்னும் தெளிவாக தெரிந்துகொள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அட்டவணை…
கட்டணத் தொகை…
மேலே உள்ள அட்டவணைப்படி ஒவ்வொரு தொகைக்கும் கிடைக்க உள்ள வட்டி தொகை இதோ…
வட்டி விகிதம்…
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை ரூ.1 லட்ச திட்டத்திற்கான கணக்கு. ரூ.1 லட்சத்திற்கு மேல் வேண்டுமானால் மாதக் கட்டணத் தொகைகள் அதற்கேற்ப மாறுபடும்.
எப்போது காசு கையில் கிடைக்கும்?
நமது திட்ட காலம் முடிந்த ஒரு மாதத்தில் தொகை கொடுக்கப்படும்.
தாமதமாக கட்டினால்…
மாதா மாதம் கட்ட வேண்டிய தொகையை தாமதமாக கட்டினால் முதல் 5 ஆண்டுகள் அல்லது 5-க்கும் குறைவான ஆண்டுகளில் ஒவ்வொரு ரூ.100-க்கும் ரூ.1.50 அபராதமாக வசூலிக்கப்படும்.
5 ஆண்டுகளுக்கு மேல் ஒவ்வொரு ரூ.100-க்கும் ரூ.2 அபராதமாக விதிக்கப்படும்.
இன்னுமொரு சலுகை…
ஒரே தடவையாக மாதத் தவணையை கட்ட முடியாவிட்டால், பாதி பாதியாக பிரித்து கட்டக்கூடிய சலுகையும் உண்டு.
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More