Advertisement
Categories: Service

10 வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை.. தமிழக அரசு மாதம் மாதம் தரும் உதவி தொகை.. விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம்.

திருவள்ளூர் மாவட்ட மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையினை பெறுவதற்கு பொதுப்பிரிவு இளைஞர்களுக்கு தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து 5 வருடங்களும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கு 1 வருடமும் போதுமானது.

உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவி தொகை பெற தகுதியுள்ள விருப்பமுள்ள பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது வேலைவாய்ப்பு இணையதள முகவரியான

website : https://www.tnvelaivaaippu.gov.in/

pdf :https://www.tnvelaivaaippu.gov.in/pdf/download_forms/ua_normal.pdf

pdf 2 : https://www.tnvelaivaaippu.gov.in/pdf/download_forms/ua_differentlyabled.pdf

என்ற இணையதளத்தில் உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் ஆகியோரின் கையொப்பம், (அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நீங்கலாக) முத்திரையினை பெற்று படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.

பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை நவம்பர் 30-ந் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அளித்து வேலைவாய்ப்பற்றோருக்கான இளைஞர் உதவித்தொகையினை பெற்று பயன்பெறுங்கள்” இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் அந்தந்த மாவட்டங்களில் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கும் மாதம் 200 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது. பிளஸ் 2 அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் என்றால் 400 ரூபாயும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 600 ரூபாயும் மாதம் உதவி தொகை வழங்கப்படுகிறது. அதேநேரம் பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம், விவசாயம் போன்ற தொழிற் பட்டப்படிபுகள் படித்தவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காது.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 72000க்கு மேல் இருக்ககூடாது. 40 வயது பூர்த்தி அடைந்திருக்ககூடாது. மேற்கண்ட தகுதி உடையவர்கள் விண்ணப்பத்தினை நவம்பர் 30-ந் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்

admin

Share
Published by
admin

Recent Posts

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

3 weeks ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

4 weeks ago

சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – யாரெல்லாம் பயன்பெறலாம்? Amazing announcement by the Tamil Nadu government – who can benefit?

சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More

4 weeks ago