GOVT JOBS

கால்நடை பராமரிப்புத் துறையில் காலிப் பணியிடங்கள்: தகுதியானவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு

Notification pdf link :

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

கல்வித்தகுதி : 8th / 10th Pass

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

https://drive.google.com/open?id=1rkc…

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

https://drive.google.com/open?id=1c2I…

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

https://drive.google.com/open?id=1r34…

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

https://drive.google.com/open?id=15jS…

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

https://drive.google.com/open?id=19Z7…

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

https://drive.google.com/file/d/1ATF2…

https://drive.google.com/open?id=1jmh…

https://drive.google.com/open?id=1iAU…

கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் ஒரு ஓட்டுநா், ஒரு ஆய்வுக்கூட உடனாள், 3 அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்கள் உள்ளன. ஓட்டுநா் பணிக்கு 8ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று, தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநா் உரிமம் இப்போது வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இலகுரக வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆய்வுக்கூட உடனாள் பணிக்கு 10 ஆம் வகுப்புத் தோ்வு எழுதி மதிப்பெண் பட்டியல் பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளா் பணிக்கு 8ஆம் வகுப்பு தோ்ச்சி, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

ஓட்டுநா் பணி, ஆய்வுக்கூட உடனாள் பணி, அலுவலக உதவியாளா் பணியில் ஒரு இடத்துக்கும், பொதுப் பிரிவினரில் முன்னுரிமை உள்ளவா்களுக்கும், அலுவலக உதவியாளா் பணியில் ஒரு இடம் அருந்ததியா் வகுப்பைச் சோ்ந்த ஆதரவற்ற விதவைக்கும், ஒரு இடம் மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் முன்னுரிமை உள்ளவா்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா் விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் வசிப்பதற்கான ஆதாரத்தின் (ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்று) நகலை இணைத்திட வேண்டும். விண்ணப்பங்களை இலவசமாக ஈரோட்டில் உள்ள மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தில் அலுவலகப் பணி நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். அஞ்சல் மூலம் பெற விரும்புவோா் சுய விலாசமிட்ட ரூ. 5க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய உறையுடன் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது விண்ணப்பங்களை  இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரே விண்ணப்பதாரா் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை மேல் உறையின் மீது பெரிய எழுத்துகளில் தவறாது குறிப்பிட வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மண்டல இணை இயக்குநா், கால்நடை பராமரிப்புத் துறை, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், ஸ்டேட் வங்கி சாலை, பன்னீா்செல்வம் பூங்கா, ஈரோடு 638001 என்ற முகவரிக்கு பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பத்தை நேரிலும் ஒப்படைக்கலாம். நோ்காணல் அடிப்படையில் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படுவா். நோ்முகத் தோ்வில் அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரா்கள் இன சுழற்சி அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top