Social Activity

கங்குலிக்கு கிடைத்த பாராட்டுக்கள்!!

கொல்கத்தா : கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொல்கத்தாவில் உள்ள தன்னுடைய வீட்டில் தன்னுடைய நேரத்தை பயனுள்ளதாக செலவழித்து வருகிறார் பிசிசிஐ தலைவர் கங்குலி

இந்நிலையில் தன்னுடைய வீட்டில் சாய்ந்த மாமரத்தை மீண்டும் அதன் இடத்தில் பொருத்தும் நடவடிக்கையில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் அதிக வலிமை தேவைப்பட்டதாகவும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த டிவீட்டுக்கு பதிலளித்த ரசிகர் ஒருவர், மற்றொரு பால்கனி, மற்றொரு வலிமையான செயல் என்று கமெண்ட் செய்துள்ளார்.

கடந்த 2002 ஜூலை 13ம் தேதி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, யுவராஜ் சிங் மற்றும் முகமது கைப் இருவரும் இணைந்து அதிரடி காட்டி, இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றினர்.

அப்போது, இந்த செயல் மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளானது. சமீபத்தில்கூட இந்த வீடியோவை தன்னுடைய மகள், பார்க்கும்போது தனக்கு சங்கடமாக உள்ளதாக கங்குலி தெரிவித்திருந்தார். இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தன்னுடைய வீட்டில் முடங்கியுள்ள கங்குலி, வீட்டில் சாய்ந்த மாமரத்தை பால்கனியில் இருந்துக்கொண்டு, மீண்டும் அதன் இடத்தில் பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அதிகமாக வலிமை தேவைப்பட்டதாகவும் டிவீட் செய்துள்ளார்.

இந்த டிவீட்டிற்கு வழக்கம் போல ஏராளமான ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் அளித்திருந்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top