Social Activity

காலிப்பணியிடம் புதிய பணியிடம் வேறுபாடு என்ன..?

காலி பணியிடம் என்பது ஒரு அலுவலகத்தில் ஒவ்வொரு பதவிகளிலும் ஒப்புதலளிக்கப்பட்ட(sanctioned strength) அளவிலான அலுவலர்கள், பணியாளர்கள் தான் இருக்க வேண்டும்.

பணி ஓய்வு மற்றும் பணி மாறுதல்கள் மூலம் ஏற்படும் காலியிடங்கள் தான் காலிப்பணியிடங்கள். இவற்றை நிரப்ப எந்த தடை உத்தரவும் இல்லை..

புதிய பணியிடங்கள் என்பது ஒரு அலுவலகத்திற்கு ஒப்புதலளிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேவைப்படும்
சமயத்தில் அரசிடம் கோரிக்கை செய்து sanction strength அளவை அதிகப் படுத்துவது ஆகும்.

மற்றும்

அலுவலகம் அல்லது குறிப்பிட்ட துறையில் இல்லாத ஒரு புதிய பணியிடத்தை அரசின் அனுமதி பெற்று நிரப்புவது.

உதாரணமாக ஒரு அலுவலகத்தில் இரு இளநிலை உதவியாளர்களுக்கு (Junior Assistant) மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர்கள் கூடுதலாக ஒரு இளநிலை உதவியாளரை கேட்க முடியாது.

அந்த இரு இளநிலை உதவியாளர் பணியிடங்களும் ஆள் இன்றி காலியாக இருந்தால் அந்த காலி பணியிடங்களை தேர்வு மூலமாக நிரப்பிக் கொள்ளலாம்

இந்த புதிய பணியிடங்கள் அதிகப்படுத்தும் நடவடிக்கைக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள் நிரப்பும் தேர்வுகளுக்கு பாதிப்பு இல்லை.


Download GO No.248

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top