Social Activity

சூடான இருசக்கர வாகனத்தின் மீது சானிடைசர் தெளித்ததும், பைக் தீப்பிடித்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது

சூடான இருசக்கர வாகனத்தின் மீது சானிடைசர் தெளித்ததும், பைக் தீப்பிடித்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் திறந்த வெளியில் கிருமிநாசினி தெளிப்பதால் எந்த பயனும் இல்லை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கைகளை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். அதற்காக சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வது முக்கியமானது. சானிடைசரில் ஆல்கஹால் அளவு 60 சதவீதம் இருப்பதால் அதனை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சானிடைசர் கொண்டு கைகளை கழுவிய உடன் சூடான பகுதிளில் பயன்படுத்தக்கூடாது. பெண்கள் கிச்சனில் சானிடைசர் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சூடான பைக் மீது சானிடைசர் தெளிக்கும் போது ஏற்படும் தீவிபத்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிசிடிவி கேமராவில் பதிவான அந்த காட்சியில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பைக் மீது சானிடைசர் தெளிக்கின்றனர். அப்போது சூடான இருசக்கர வாகனத்தின் மீது சேனிடைசர் தெளித்ததும், பைக் தீப்பிடித்து எரிகிறது.

தீவிபத்து ஏற்பட்டதும் இருசக்கர வாகனத்தில் இருப்பவர் உடனடியாக இறங்கி தப்பினார். அருகில் இருந்த காவலாளிகள் தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை அணைத்தனர். இந்த சம்பவம் எந்த மாநிலத்தில் நடந்தது என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை. எனினும் சேனிடைசர் தெளிக்கும்போது கவனம் தேவை என பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top