GOVT JOBS

வேலைவாய்ப்பு விவரம்(TNPESU RECRUITMENT 2020-APPLY NOW)

தமிழக அரசின் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இரண்டு விதமான பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு விதமான பணிகளுக்கும் தனித்தனியான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

அமைப்பின் பெயர்: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்

வகை: தமிழ்நாடு அரசு

மொத்த காலி பணியிடங்கள்: 17

கடைசி நாள்: 19.06.2020 மற்றும் 30.06.2020

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

பணிகளின் வகைகள்: 02

பணியிடம்: தமிழ்நாடு

பணிகள் மற்றும் காலி பணியிடங்கள்:

1. மேற்பார்வையாளர்-02 Vacancy

2. விருந்தினர் விரிவுரையாளர்-15 Vacancy

Total-17 Vacancies

வயது வரம்பு:-

  • கல்வித் தகுதியுடன் கூடியவர்கள் 21 வயது முதல் விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு களைப் பற்றியும் அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி:-

  • மேற்கண்ட பணியிடங்களுக்கு எந்தத் துறையில் வேண்டுமானாலும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • மேலும் அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்க்கவும்.
TNPESU Recruitment 2020-Apply Now

சம்பள விவரம்:-

  • மேற்பார்வையாளர் என்ற பணிக்கு மாத சம்பளம் ரூ.15,000/- வழங்கப்படும்.
  • விருந்தினர் விரிவுரையாளர் என்ற பணியிடத்திற்கு மாத சம்பளம் ரூ.25,000/- வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:-

  • அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப கட்டணத்திற்கான காசோலை யையும் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • அறிவிப்புகள் இரண்டு இருப்பதால் நீங்கள் எந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் என்பதை முடிவு செய்து அந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பவும்.
  • இரண்டு அறிவிப்பிலும் விண்ணப்பிக்க கூடிய கடைசி தேதி மாறுபட்டு இருக்கும் அதனை கவனத்தில் கொள்க.

விண்ணப்ப கட்டணம்:-

  • SC/SCA/ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250/- செலுத்த வேண்டும்.
  • மற்ற அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- செலுத்த வேண்டும்.

குறிப்புகள்:-

1. இந்த வேலை வாய்ப்பானது தற்காலிக அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

2. சில சிறிய தேர்வுகள் நேர்காணலின் அடிப்படையில் இந்த வேலைக்கு பணி அமர்த்தப்படுவார்கள்.

3. நிபந்தனைகள் அனைத்தும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முறையாக படித்துக்கொண்டே மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்.

4. முறையான தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

5. தகுதி இல்லாத விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேற்பார்வையாளர் NOTIFICATION AND APPLICATION

விருந்தினர் விரிவுரையாளர் NOTIFICATION AND APPLICATION

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top