GOVT JOBS

ரயில்வே வேலைவாய்ப்பு; 1,03,769 காலியிடங்களில் 20 சதவீதம் அப்ரெண்டிஸுகளுக்கு ஒதுக்கீடு

பயிற்சி பெறுபவர்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே எடுத்து வருகிறதுஅப்ரெண்டிஸ் சட்டத்தின் படி, தற்போது ஆட்சேர்ப்பு நடைபெறும் முதல் நிலைக்காக அறிவிக்கப்பட்ட 1,03,769 காலியிடங்களில் 20 சதவீத காலியிடங்களை (அதாவது 20,734 காலியிடங்கள்) பயிற்சி பெறுவோருக்காக (அப்ரெண்டிஸ்) இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்தது.ரயில்வே ஸ்தாபனங்களில் பயிற்சி பெற்ற அப்ரெண்டிஸ்கள் நிரந்தர பணி நியமனத்தை கோரி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன.பொது மேலாளர்களுக்கு முன்பு இருந்து வந்து, மார்ச் 2017-இல் விலக்கப்பட்ட அதிகாரத்தை திரும்ப அளிப்பதன் மூலம் இதை அப்ரெண்டிஸ்கள் கோரி வருகின்றனர்.சிலர் கோரி வரும் திறந்தவெளி போட்டியில்லாத நிரந்தர பணி என்பது அரசியலமைப்பு விதிகள் மற்றும் இந்திய அரசின் நிரந்தர பணி விதிமுறைகளுக்கு முரணானது.

நாட்டின் அனைத்து மக்களும் நிரந்தர பணிகளுக்கு விண்ணப்பித்து போட்டியிட உரிமையுள்ளவர்கள் ஆவார்கள். திறந்தவெளி போட்டி இல்லாத நேரடி நியமனம் விதிகளுக்கு புறம்பானது.மேலும், அப்ரெண்டிஸ் சட்டத்தில் 2016-இல் செய்த திருத்தத்தின் படி, தங்களது ஸ்தாபனத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவதற்கான கொள்கையை பணி வழங்கும் ஒவ்வொருவரும் வகுக்க வேண்டும்.இதை மனதில் கொண்டு, தற்போது ஆட்சேர்ப்பு நடைபெறும் முதல் நிலைக்காக அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் 20 சதவீத இடங்களை அப்ரெண்டிஸ்களுக்காக இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top