Uncategorized

‘நீல நிலா’- நாளை வானில் தெரியும்… பார்க்க மறந்துடாதீங்க.. இல்லாட்டி 30 வருசம் காத்திருக்கணும்!

சென்னை, :வானில் நிகழும் பல்வேறு அதிசயங்களில் ஒன்றுதான் ‘நீல நிலா’. நீல நிலா என்றால் நீல நிறத்தில் இருக்கும் என்று பொருள் கிடையாது. இதுவரை நீங்கள் பார்த்த முழுநிலா (பவுர்ணமி நிலா), மிகப் பெரிதாகவும் குற்றம் குறை இல்லாமல் முழுதாக தெரியும் அவ்வளவுதான். அப்படிப்பட்ட முழு நிலா நாளை வானில் தோன்றுகிறது.

இதற்கு நீல நிலா என்று எப்படி பெயர் வந்தது என்றால், ஒரு மாதத்தில் இரண்டு பவுர்ணமி நிலாக்கள் வருவதாக வைத்துக்கொண்டால் அதில் இரண்டாவதாக வரும் பவுர்ணமி நிலா நீல நிலா என்று அழைக்கப்படுகிறது. சந்திரனை அடிப்படையாக கொண்ட நாள்காட்டியில் (காலண்டர்) கணக்குப்படி சந்திரன் பூமியை ஒரு சுற்று சுற்றிவிட்டு அடுத்த சுற்றில் முழு நிலவாக காட்சியளிக்க 29 நாட்கள் தேவைப்படுகிறது.

ஆனால், சில மாதங்களில் 30 அல்லது 31 நாட்கள் இருப்பதால், சில மாதங்களில் இரண்டு முறை பவுர்ணமி வருவதுண்டு. அப்படி ஒரு நிகழ்வு தான் நாளை வானில் நிகழ உள்ளது.பெரும்பாலும், இந்த நிலா நீல நிறத்தில் தெரிவதில்லை. சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால், அறிவியல் அறிஞர்கள் இதை நீல நிலா என்று பெயர் வைத்துள்ளனர். இந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஒரு பவுர்ணமி வந்தது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 31ம் தேதி இரவு 8.19 மணிக்கு இரண்டாவது பவுர்ணமி வருகிறது. இதற்கு பெயர் நீல நிலா என்று மும்பை நேரு கோளரங்க இயக்குநர் அரவிந்த் பரஞ்சியே தெரிவித்துள்ளார். இந்த நீல நிலா பிப்ரவரி மாதத்தில் தோன்ற வாய்ப்பு இல்லை. அடுத்த நீல நிலா 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top