GOVT JOBS

BREAKING: இயற்கையாக உயிரிழந்தால் ரூ.2 லட்சம். தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!!

தமிழக அரசின் மின்சார வாரியத்தில் கேங்மேன் பதவிகளுக்கான தேர்வு முடிவுகள்

மாவட்ட வாரியான தேர்வானவர்கள் ரிசல்ட்

தமிழகத்தில் குடும்பத்தின் தலைவர் இயற்கையாகவே உயிரிழந்தால் 2 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பன்னீர்செல்வம் பேசுகையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

அதனால் திமுக அங்கிருந்து வெளிநடப்பு செய்தது. இதனையடுத்து தமிழகத்தின் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பயிர்க் கடன் தள்ளுபடி காக இடைக்கால வரவு மற்றும் செலவு திட்ட மதிப்பீட்டில் 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. 2000 மின்சார பேருந்துகள் உட்பட 12 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.1,35,641 கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மின்சாரத் துறைக்கு ரூ.7, 217 கோடி நிதி ஒதுக்கீடு. உயர் கல்வித் துறைக்கு ரூ.5, 470 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழக சுகாதாரத் துறைக்கு ரூ.19,420 கோடி நிதி ஒதுக்கீடு. கோவை மெட்ரோ திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் இயற்கையாகவே உயிரிழந்தால் 2 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top