Social Activity

தங்கப் பத்திரம் வாங்கத் தயாரா? விற்பனை தொடக்கம்!

தங்க முதலீட்டுப் பத்திரங்களை வாங்குவதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கிராமுக்கு ரூ.5,334 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Sovereign gold bond scheme எனப்படும் மத்திய அரசின் தங்கப் பத்திரத் திட்டத்தின் கீழ் தங்கப் பத்திரங்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்றன. இத்திட்டத்தில், தங்கத்திற்கான விலை முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். கூடுதலாக செய்கூலி, சேதாரம் என எதுவும் கிடையாது. எனவே இப்பத்திரங்களில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி வாயிலாக வருமானம் ஈட்டிக்கொள்ளலாம்.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதால் விலை ஏற ஏற வட்டி வாயிலாக அதிக லாபமும் கிடைக்கும். தங்கப் பத்திரங்களை வாங்கி எட்டு ஆண்டுகள் வைத்திருக்கலாம். எட்டு ஆண்டுகள் முடிந்த பின்னர் கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்தத் தேவையில்லை. எட்டு ஆண்டுகள் வரை காத்திருக்க முடியாது என்றாலும், அவசரத் தேவை ஏற்பட்டாலும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் பத்திரத்தை விற்று பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அச்சமயத்தில் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். தங்கப் பத்திரம் என்பது கிட்டத்தட்ட தங்கத்தை போன்றதுதான். இந்தப் பத்திரத்தை வங்கியில் அடகு வைத்தும் கடன் பெறலாம்.

Gold Rate in Chennai: ஒரு வழியா விலை குறைஞ்சிருச்சு!

இந்நிலையில், முதலீட்டுப் பத்திரங்களை இன்று முதல் வாங்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலமாகவும் பத்திரங்களை வாங்கலாம். ஆன்லைன் மூலமாக வாங்கினால் கிராமுக்கு 50 ரூபாய் சலுகை வழங்கப்படும் எனவும், ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் பத்திரங்கள் வாடிக்கையாளர்களிடம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கப் பத்திரத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5,334 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 2020-21 நிதியாண்டில் அறிவிக்கப்படும் ஐந்தாவது பத்திர வெளியீடாகும். ஆகஸ்ட் 7ஆம் தேதி வரையில் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top