Social Activity

குடும்பத் தலைவிக்கு ரூபாய் 1000 வழங்குவது எப்போது?

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.திமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அதிமுக குடும்பத் தலைவிகளுக்கு 1,500 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.இந்தச் சூழலில் திமுக ஆட்சி பொறுப்பேற்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது. ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று அறிவிக்கப்படவில்லை. ஆளுநர் உரையில்கூட இத்திட்டம் குறித்த அறிவிப்பு இடம் பெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், நேற்று (ஜூன் 28) திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, “தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மக்களின் நலனுக்காக 4,000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகை இலவச மளிகை பொருட்களின் தொகுப்பு வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 99 சதவிகிதம் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுவிட்டது. விடுபட்டவர்களையும் கண்டறிந்து பொருட்கள் வழங்கப்படும்.அதுபோன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும். எந்த குறையும் இல்லாமல் அந்தத் திட்டமும் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top