சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்தது. அந்த வகையில் 2025ம் ஆண்டில் மாதம் மாதம் தங்கம் எவ்வளவு உயர்ந்தது இன்று பார்க்கலாம்.
தங்கம் கடந்த ஜனவரி 2025ல் ஒரு கிராமுக்கு சுமார் ₹7,500இல் தொடங்கியது. உலகளாவிய பணவீக்கக் கவலைகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் முதலீட்டாளர்கள் கவனமாக வர்த்தகம் செய்தனர். இதனால் டாலர் விலை சரிந்து தங்கம் தொடர்ந்து உயர்ந்தது. பிப்ரவரியில், தங்கம் ஒரு கிராமுக்கு ₹8,100ஐ நெருங்கியது. பாதுகாப்பான முதலீட்டுத் தேவை இதற்கு முக்கிய காரணம்.
மார்ச்சில், ஒரு கிராமுக்கு ₹8,100 – ₹8,200 என தங்கம் நிலையாக வர்த்தகமானது. மத்திய வங்கிகளின் தங்க வர்த்தகமும், நீடித்த பணவீக்கமும் தங்கம் மீதான முதலீட்டாளர் ஆர்வத்தைத் தூண்டின. ஏப்ரலில் சுமார் ₹8,570ஐ எட்டிய தங்கம், மே மாதத்தில் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் நாணய மதிப்பு சரிவால் ₹9,000 என்ற நிலையை அடைந்தது. டிரம்ப் வர்த்தக போர் இந்த சமயத்தில் உச்சம் அடைந்ததும் இதற்கு காரணம்.
ஜூன் மாதத்தில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ₹9,730ஐத் தொட்டது; இது பெரும்பாலான பாரம்பரிய முதலீடுகளைவிட சிறந்த வருமானத்தைக் கொடுத்தது. ஜூலையில் தங்கம் ₹9,840ஐக் கடந்து, ஆகஸ்டில் ₹9,990ஐ நெருங்கி, கிட்டத்தட்ட ₹10,000 எல்லையைத் தொட்டது. சந்தை நிலையற்ற தன்மை இருந்தும், பண்டிகைக் கால வாங்குதல்களும் முதலீட்டாளர் நம்பிக்கையும் விலைகளைத் தாங்கிப் பிடித்தன.செப்டம்பர் – அக்டோபர் – நவம்பர் மாதம் விலை
செப்டம்பரில் வர்த்தக போர் மீண்டும் உச்சம் அடைந்தது. இதனால் ஏற்பட்ட உலகளாவிய நிச்சயமற்ற தன்மையால் தங்கம் மீதான முதலீடுகள் பெருக.. தங்கம் ஒரு கிராமுக்கு சுமார் ₹10,595 ஆக உயர்ந்தது. அக்டோபரில் இதே நிலை தொடர்ந்தது. இதனால் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ₹11,900ஐத் தாண்ட வைத்தது. இது 2025ம் ஆண்டின் மிகக் கூர்மையான உயர்வுகளில் ஒன்றாகும். நவம்பரிலும் விலை ₹12,300 ஆக மேலும் உயர்ந்தது.
2025 ஆம் ஆண்டின் முடிவில், ஒரு கிராம் தங்கம் கிட்டத்தட்ட ₹13,400ஐ எட்டி, பத்தாண்டுகளில் இல்லாத வலுவான வளர்ச்சியை தங்கம் பதிவு செய்தது. ஜனவரியில் ₹7,500க்கு ஒரு கிராம் தங்கம் வாங்கி, டிசம்பர் இறுதி வரை வைத்திருந்த ஒருவருக்கு, அதன் மதிப்பு ₹13,400 ஆக உயர்ந்தது. இது ஒரு கிராமுக்கு ₹5,900 லாபம் மற்றும் சுமார் 78 சதவிகித வருமானத்தை ஈட்டித் தந்தது.
2025 ஆம் ஆண்டில், தங்கம் இந்திய முதலீட்டாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான நீண்டகால சொத்து என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியுடன் நிரூபித்தது. அதாவது நான்தான் பாஸ்.. மத்த முதலீடு எல்லாம் தூசு என்று தங்கம் பெரிய பாடம் எடுத்துள்ளது.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More
வாக்காளர் பட்டியல் Read More