அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
8-ம் வகுப்பு வரையே படித்தவரா நீங்கள்? அரசு அலுவலகத்தில் பணி வாய்ப்பை எதிர்பார்க்கிறீர்களா? உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு வழக்கு துறையின் கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை மற்றும் மதுரையில் உள்ள 16 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். விண்ணப்பிக்க தேவையான விவரங்களை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.
Office Assistant Job
சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர்அலுவலகம் இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணியின் விவரங்கள்
பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
அலுவலக உதவியாளர் (Office Assistant) 16
இதில் பொதுப் பிரிவில் – 5, பிசி பிரிவில் – 5, எம்பிசி பிரிவில் – 3, எஸ்சி பிரிவில் – 3 என நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு
அரசு வழக்கு துறையின் அலுவலக உதவியாளர் பதவிக்கு 01.07.2025 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபடியாக 32 வயது வரை இருக்கலாம். பிசி பிரிவினர் அதிகபடியாக 34 வயது வரையும், எம்பிசி/டிசி பிரிவினர் – 37 வயது வரையும் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினர் அதிகபடியாக 37 வயது வரையும் இருக்கலாம்.
கல்வித்தகுதி
அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்திற்கு கல்வித்தகுதியில் விலக்கு உள்ளது.
சம்பள விவரம்
இப்பணியிடங்களுக்கு சம்பள விவரம் குறித்த விவரம் அறிவிப்பில் இடம்பெறவில்லை.
தேர்வு செய்யப்படும் முறை
உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்படும் அலுவலக உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் முறை குறித்து அறிவிப்பில் இடம்பெறவில்லை.
விண்ணப்பிப்பது எப்படி?
அரசு வழக்கு துறை அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவத்தை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்துடன் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து தபால் வழியாக அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
ஆதார் அட்டை,
பிறப்பு தேதி குறிப்பிட்ட ஏதேனும் ஒரு ஆவணம்
கல்வித்தகுதி சான்றிதழ்
வகுப்பு பிரிவு சான்றிதழ்
சிறப்பு தேவை இருப்பின் அதற்கான சான்றிதழ்
விண்ணப்பப் படிவம் இருக்க வேண்டிய முறை
விண்ணப்பத்தில் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, வகுப்பு பிரிவு, முகவரி, கையொப்பம் மற்றும் புகைப்படம் ஆகிய விவரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ரூ.50 தபால் தலை ஒட்டப்பட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பம், ஆவணங்கள் இணைக்கப்படாமல் அனுப்பப்படும் விண்ணப்பம், கடைசி தேதிக்குள் பின்னர் பெறப்படும் விண்ணப்பம் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 14-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய முகவரி
The Advocate General Of Tamil Nadu,
High Court,
Chennai – 600104.
முக்கிய நாட்கள்
விவரம் தேதிகள்
விண்ணப்பங்கள் அலுவலகம் சென்றடைய கடைசி தேதி 14.08.2025 மாலை 5.45 மணி வரை
நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்களுக்கு அடுத்தக்கட்ட தேர்வு முறை பற்றிய தகவல் பகிரப்படும். முறையான ஆவணங்களுடன் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு கொடுக்கப்போகும் டிசம்பர் பரிசு. முழு விவரம் தமிழ்நாடு அரசு முன்னாள்… Read More
Post Office RD 2025: The Post Office Recurring Deposit scheme continues to be one of… Read More
Gold Loan: கூட்டுறவு துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடனுதவிகள் தங்க நகை அடகின் பேரில் வழங்கப்பட்டு… Read More
'சென்யார்' புயல் கரையைக் கடக்கிறது: கனமழை காரணமாக தமிழக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை? ஐஎம்டியின் சமீபத்திய புதுப்பிப்பைப் பாருங்கள் Read More
When a superstar walks into politics, people usually expect big rallies and fiery speeches. Here,… Read More
மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More