PM Kisan 20வது தவணை எப்போது வரும்? சிக்கல் இல்லாமல் பெற இதை செய்வது அவசியம் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா. பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்? விவசாயிகள் இப்போது என்ன செய்ய வேண்டும்? PM Kisan Latest News: பிஎம் கிசான் பயனாளியா நீங்கள்? 20வது தவணைக்காக காத்திருக்கிறீர்களா? உங்களுக்கான முக்கிய அப்டேட் இதோ. PM Kisan 20வது தவணை எப்போது வரும்? சிக்கல் இல்லாமல் பெற இதை செய்வது அவசியம்.. PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் 20வது தவணைக்கான காத்திருப்பு நீண்டுகொண்டே போகிறது. கடந்த சில நாட்களாக, ஜூலை 18 (வெள்ளிக்கிழமை) அன்று, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) திட்டத்தின் 20வது தவணையான ரூ. 2000 வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது நடக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. ஜூன் மாதமும் இதற்காக காத்திருந்து விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். PM Kisan 20th Installment: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்? - பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணை குறித்த எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் அரசாங்கத்தின் தரப்பிலிருந்து அளிக்கப்படவில்லை. - இது விவசாயிகளுக்கு மேலும் குழப்பத்தை அளித்துள்ளது. - எனினும், இன்னும் சில நாட்களில் இதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிஎம் கிசான் திட்டம்: 4 மாதங்களுக்கு ஒரு முறை தவணை - பிஎம் கிசான் சம்மான் திட்டத்தில் இதுவரை 4 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு தவணை என்ற வீதம், ஒவ்வொரு தவணையிலும் தலாம் ரூ.2,000 அளிக்கப்படுகின்றது. - இதற்கு முந்தைய 19வது தவணை பிப்ரவரி 24, 2025 அன்று வந்தது. இப்போது ஜூலை மாதத்தின் கடைசி வாரம் வரவுள்ளது. - அதாவது 19வது தவணை வந்து நான்கு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. - ஆனால் 20வது தவணைக்கான தேதி அல்லது அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. - இது விவசாயிகளிடையே குழப்பத்தையும் அமைதியின்மையையும் அதிகரித்து வருகிறது. பிரதமர் மோடியின் மோதிஹரி பேரணியிலில் அறிவிப்பு வரவில்லை ஜூலை 18 அன்று, பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் உள்ள மோதிஹரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனாவின் 20வது தவணை குறித்து ஒரு பெரிய அறிவிப்பு வரும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். பேரணியில், பிரதமர் மோடி ரயில், சாலை, மீன்வளம், கிராமப்புற மேம்பாடு மற்றும் தகவல்…
PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் 20வது தவணைக்கான காத்திருப்பு நீண்டுகொண்டே போகிறது. கடந்த சில நாட்களாக, ஜூலை 18 (வெள்ளிக்கிழமை) அன்று, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) திட்டத்தின் 20வது தவணையான ரூ. 2000 வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது நடக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. ஜூன் மாதமும் இதற்காக காத்திருந்து விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பிரதமர் மோடியின் மோதிஹரி பேரணியிலில் அறிவிப்பு வரவில்லை ஜூலை 18 அன்று, பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் உள்ள மோதிஹரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனாவின் 20வது தவணை குறித்து ஒரு பெரிய அறிவிப்பு வரும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். பேரணியில், பிரதமர் மோடி ரயில், சாலை, மீன்வளம், கிராமப்புற மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான ரூ.7200 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தனது உரையில், விவசாயிகளின் வருமானம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பது அரசாங்கத்தின் முன்னுரிமை என்று பிரதமர் உறுதியாகக் கூறினார். இதுவரை சுமார் ரூ.3.5 லட்சம் கோடி பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் கீழ் விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாக சென்றடைந்துள்ளதாக அவர் கூறினார். மோதிஹாரியின் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மட்டும் ரூ.1,500 கோடிக்கும் அதிகமான உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில், சமீபத்தில் அமைச்சரவை ஒப்புதல் பெற்ற ‘பிரதான் மந்திரி தன்-தன்யா கிரிஷி யோஜனா’ பற்றியும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயத்தில் பின்தங்கிய 100 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்குள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சுமார் 1.75 கோடி விவசாயிகள் இதன் பலனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவற்றில் பெரும்பாலானவை பீகாரைச் சேர்ந்தவை.
எனினும், இந்த உரையில் பிஎம் கிசான் 20வது தவணை குறித்த அறிவிப்பு எதுவுமே வரவில்லை. ஆகையால் விவசாயிகளின் காத்திருப்பு இன்னும் தொடர்கிறது.
பிஎம் கிசான் 20வது தவணை இன்னும் சில நாட்களில் வங்துவிடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்குள் பயனாளி விவசாயிகள், எந்த சிக்கலும் இல்லாமல் இந்த தவணை தங்களுக்கு கிடைப்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா: இவை அனைத்தும் சரியாக இருப்பது அவசியம்
இவை அனைத்தும் சரியாக இருந்தால், அரசு 20வது தவணையை வெளியிட்டவுடன் அது உங்கள் கணக்கில் தானாக வந்து சேரும்
Website post link 👇Must watch*PM KISAN
WEBSITE LINK 👇https://pmkisan.gov.in
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More
ICMR RECRUITMENT 2025 Read More
பொது தகவல்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட்bTAMCO LOAN இந்தத் திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க, தொழில்… Read More
The Combat Vehicles Research and Development Establishment (DRDO CVRDE) has released an official notification for… Read More
தமிழ்நாட்டில் டிராக்டர் வாங்குவதற்கான மானியம் பெற, விவசாயிகள் தமிழ்நாடு அரசின் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில்,… Read More