PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள் முதல் அன்றாடத் தேவைகள் வரை அனைத்தையும் பொதுமக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு வரும் இவர்களுக்கு, வங்கிக் கடன் வசதி கிடைப்பது நீண்டகாலமாகப் பெரும் சவாலாகவே இருந்து வந்தது. குறிப்பாகக் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இவர்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இவர்களைக் கைதூக்கி விடும் நோக்கில் 2020-ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதே ‘பிஎம் ஸ்வாநிதி’ திட்டம்.
தற்போது இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இத்திட்டத்தை மார்ச் 31, 2030 வரை நீட்டித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வெறும் கடன் உதவியோடு நில்லாமல், தெருவோர வியாபாரிகளைத் தொழில்முனைவோராக மாற்றும் நோக்கில் இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், வியாபாரிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் முதல் தவணையாக 10,000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டாம் தவணைக் கடன் 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தவணையாக 50,000 ரூபாய் வரை கடன் பெற முடியும்.
இதில் மிக முக்கியமான அம்சமாக, இரண்டாவது தவணைக் கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்தும் வியாபாரிகளுக்கு ‘யுபிஐ’ (UPI) வசதியுடன் கூடிய ‘ரூபே கிரெடிட் கார்டு’ (RuPay Credit Card) வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் வியாபாரிகள் தங்களின் அவசரத் தேவைகளுக்கும், தொழில் விரிவாக்கத்திற்கும் உடனடிப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இது தெருவோர வியாபாரிகளை டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாற்றும் ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவை டிஜிட்டல் மயமாக மாற்றும் முயற்சியில் தெருவோர வியாபாரிகளையும் இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, டிஜிட்டல் முறையில் வியாபாரம் செய்யும் விற்பனையாளர்களுக்குப் பணத்திருப்பலன் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு வியாபாரி ஆண்டுக்கு 1,200 ரூபாய் வரை கேஷ்பேக் பெற முடியும். மேலும், மொத்த விலையில் பொருட்களை வாங்கும்போதும் கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
பிஎம் ஸ்வாநிதி திட்டத்துக்கு யாரெல்லாம் விண்ணபிக்கலாம்?
தேவையான ஆவணங்கள்
இத்திட்டத்திற்குப் பிணையில்லாக் கடன் (Collateral-free loan) வழங்கப்படுவதால், பெரிய அளவில் ஆவணங்கள் தேவையில்லை. கீழ்க்கண்டவை மட்டும் போதுமானது:
பிஎம் ஸ்வாநிதி திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?
நீங்கள் நேரடியாகவோ அல்லது பொதுச் சேவை மையங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்:
கடன் திருப்பிச் செலுத்தும் முறை மற்றும் வட்டி மானியம்
வட்டி மானியம்: நீங்கள் வாங்கிய கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்தினால், ஆண்டுக்கு 7% வட்டி மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
அபராதம் இல்லை: கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்த விரும்பினால், அதற்காக எந்தவிதமான அபராதக் கட்டணமும் (Pre-payment penalty) வசூலிக்கப்பட மாட்டாது.
டிஜிட்டல் ஊக்கத்தொகை: கியூஆர் கோட் (QR Code) மூலம் டிஜிட்டல் முறையில் பணத்தைப் பெற்றால், மாதம் 100 வரை கேஷ்பேக் கிடைக்கும்.
நீங்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற்றவுடன், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும். இதன் மூலம் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா காப்பீடு, பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா விபத்துக் காப்பீடு, ஜனனி சுரக்ஷா யோஜனா, ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு போன்ற மத்திய அரசின் 8 முக்கியத் திட்டங்களின் பயன்கள் உங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
தெருவோர வியாபாரிகளுக்கு குட் நியூஸ், ரூ.50,000 கடன், ஏகப்பட்ட சலுகைகள்
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More
வாக்காளர் பட்டியல் Read More