நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.யில் 326 சீனியர் எக்ஸிகியூட்டிவ் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எக்ஸிகியூட்டிவ் பிரிவில் 241 பணியிடங்களும், சீனியர் எக்ஸிகியூட்டிவ் பிரிவில் 85 பணியிடங்களும் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் sbi.co.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். நேற்று முதல் விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கிய நிலையில், ஜுலை 13-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள், இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வித்தகுதி, வயது உள்ளிட்ட விபரங்களை இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு மூலம் சரியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய காலகட்டத்தை கருத்தில் கொண்டு நேர்முகத்தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படவில்லை.
பொதுப்பிரிவினர், பொருளாதரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணமாக ₹ 750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி / எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இலவசம்
மேலதிக விபரங்களுக்கு sbi.co.in இந்த தளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
NOTIFICATION LINK CLICK HERE
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More