TN GOVT Village Assistant Recruitment 2020 – 5th Pass
செ.வெ.எண்:-17/2020
நாள்:-12.10.2020
திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டை வட்டத்தில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
காலிப்பணியிடம் உள்ள கிராமம் மற்றும் இடஒதுக்கீடு விபரங்கள் பின்வருமாறு:
1.மட்டப்பாறை கிராமம்- பொதுப்பிரிவு பெண்கள் மட்டும் – முன்னுரிமையற்றவர்கள்,
2.சித்தர்கள்நத்தம் கிராமம் – பிசி (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் நீங்கலாக) – பொது – முன்னுரிமையுள்ளவர்கள்,
3.குல்லலக்குண்டு கிராமம் – பொது பிரிவு – பொது – முன்னுரிமையுள்ளவர்கள்,
4.விருவீடு கிராமம் – எஸ்சி – பொது –முன்னுரிமையற்றவர்,
5.மல்லணம்பட்டி கிராமம் – எம்பிசிஃடிஎன்சி – பெண்கள் மட்டும் – முன்னுரிமையற்றவர்கள்,
6.மாலையகவுண்டன்பட்டி கிராமம் – பிசி (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் நீங்கலாக) – பொது –முன்னுரிமையற்றவர்,
7.குன்னுவாரன்கோட்டை கிராமம் – பொது பிரிவு – பொது –முன்னுரிமையற்றவர்,
8.கணவாய்பட்டி கிராமம் – எஸ்.சி., – பெண்கள் மட்டும் – முன்னுரிமையற்றவர்.
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் கல்வித்தகுதி 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு 01.07.2020 தேதியை கணக்கில் கொண்டு குறைந்தபட்சம் 21 வயது அதிகபட்சம் 35 வயது இருக்க வேண்டும்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, பதிவு நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு : காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யும்பொழுது, பணியிடம் காலியாக உள்ள கிராமம் அல்லது 2 கிலோ மீட்டர் சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவில் தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில், காலிப்பணியிடம் அமைந்துள்ள குறுவட்டத்தைச் சேர்ந்த குறுவட்ட அளவில் மட்டுமே தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும்.
தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது. ஜாதி ஆகிய விபரங்கள் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை 22.10.2020-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் நிலக்கோட்டை வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More