Tata seera
டாடாவின் புது காருக்கு ஒரே நாளில் 2 லட்சம் பேர் புக்கிங்? விலை இவ்ளோதானா! வெடவெடத்து போன மாருதி சுஸுகி!
Welcome to the @TNJOB channelwebsite :
Final website link: https://www.elections.tn.gov.in/index.aspx
Webseit 1 : https://voters.eci.gov.in/
website 2 : https://electoralsearch.eci.gov.in/uesfmempmlkypo
இந்தியாவில் கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 2003ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த ஒரு கார் டாடா சியரா (Tata Sierra). ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador), மாருதி 800 (Maruti 800) கார்களை போன்று, டாடா சியரா காருக்கும், இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இது தற்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. சுமார் 22 வருட இடைவெளிக்கு பின்னர், டாடா சியரா கார், இந்திய சந்தையில் தற்போது மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சியரா காரை, கடந்த நவம்பர் 25ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
இதற்கு மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்த காரணத்தால், டாடா சியரா விற்பனையில் சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முன்பதிவு எண்ணிக்கையில் அது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. டாடா சியரா காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் நேற்று (டிசம்பர் 16) அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன.
முதல் நாளிலேயே 70 ஆயிரத்திற்கும் அதிகமான இந்திய வாடிக்கையாளர்கள் புதிய டாடா சியரா காரை முன்பதிவு செய்துள்ளனர்! இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு உச்சகட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இங்கே மற்றொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.
டாடா சியரா காரை வாங்குவதற்கு இன்னும் 1.35 லட்சம் வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் முன்பதிவு நடைமுறைகளை முடிக்கும் தருவாயில் உள்ளனர். எனவே வரும் நாட்களில் டாடா சியரா காருக்கான ஒட்டுமொத்த முன்பதிவு எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியின் மூலமாக இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
டாடா சியரா காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 1.5 லிட்டர் Kryojet டீசல், 1.5 லிட்டர் TGDi Hyperion பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் NA Revotron பெட்ரோல் ஆகியவை ஆகும். கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை (Gear Box Options) பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டிசிஏ உள்ளிட்ட ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன்டன் ஏராளமான அதிநவீன வசதிகளையும் (Features) டாடா சியரா கொண்டுள்ளது. இதில், முன் பக்க டேஷ்போர்டில் வழங்கப்பட்டுள்ள 3 திரைகள் (முன் பக்க பயணியின் இருக்கை முன்பாக 12.3 இன்ச் திரை, 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்) மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
மேலும் பனரோமிக் சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 12 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உடன் கீலெஸ் எண்ட்ரி போன்ற வசதிகளையும் டாடா சியரா கொண்டுள்ளது.
அதேபோன்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்ற கார்களை போல், சியராவிலும் பாதுகாப்பு வசதிகளுக்கு (Safety Features) சற்றும் பஞ்சம் இல்லை.பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS – Advanced Driver Assistance Systems) மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதுதவிர டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா, அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளும், டாடா சியரா காரில் கொடுக்கப்பட்டுள்ளன.டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா சியரா காரின் ஆரம்ப விலை வெறும் 11.49 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 21.49 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், டாடா சியரா காருக்கு மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டாடா சியரா காரை, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகள், வரும் ஜனவரி 15ம் தேதியில் இருந்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் முன்பதிவுகள் குவிந்து வருவதால், டாடா சியரா விற்பனையில் சாதனைகளை படைக்க போவது உறுதி.
இது மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) போன்ற போட்டி மாடல்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More