டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுதியவர்களுக்கு சூப்பர் நியூஸ்… ரிசல்ட்டை முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம்.
2025ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான Answer Key தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnpsc.gov.in – ல் வெளியிடப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4-ல் உள்ள 3,935 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் கடந்த 12ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.
You May also watching :
தேர்வுக்கு விண்ணப்பித்த 13 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்று தேர்வை எழுதினர்.
தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் சூழலில், தேர்வில் தேர்வர்கள் அளித்த விடை சரியானதா என்பதை தெரிந்துகொள்ளும் விதமாக Answer Key வெளியாகியுள்ளது.
2025ஆம் ஆண்டு TNPSC Group 4…
தேர்வின் Answer Key-யில் சரியான விடை எது என மார்க் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வின் போது தேர்வர்களுக்கு எந்த குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும்.
உத்தேச விடைகளுக்கான மறுப்புகள்/ கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணைய வழியில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அஞ்சல், மின்னஞ்சல் வழியாக பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.
TNPSC Group 4… Result when will be coming
அதேபோல், 28.07.2025 அன்று மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படமாட்டாது.

இறுதி செய்யப்பட்ட விடைகள், தெரிவுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும். பகுதி அ – தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு வினா எண் 90 முதல் 92 வரையுள்ள உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள் வினா எண் 90-க்கு மேலே கொடுக்கப்பட்ட பத்தியில் இருந்து தெரிவிக்க வேண்டும்.
பகுதி அ – பொது ஆங்கிலத்தில் வினா எண் 90 முதல் 92 வரையுள்ள உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள் வினா எண் 90-க்கு மேலே கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து தெரிவிக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
