Free lpg connection : பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 லட்சம் கூடுதல் எல்பிஜி இணைப்புகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி அறிவித்துள்ளார்.
Apply Link: ஆன்லைனில் விண்ணப்பிக்க https://www.pmuy.gov.in/
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. மத்திய அரசு இத்திட்டத்தின் கீழ் 25 லட்சம் கூடுதல் இணைப்புகளை வழங்க உத்தரவிட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி நாடாளுமன்ற மக்களவையில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இது பொதுமக்களுக்கான ஒரு குட் நியூஸ். எனவே, பொதுமக்கள் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் இணைவது எப்படி? இத்திட்டத்தின் நன்மைகள் என்ன?, யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பிரதமர் உஜ்வாலா திட்டம் (PMUY):
நாட்டின் பல மாநிலங்களில் இப்போதும் கிராமப்புற மற்றும் பின்தங்கிய ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் எரிபொருட்களான விறகு, சாணத்தையே பயன்படுத்துகின்றனர். அவற்றுக் பதிலாக சுத்தமான எல்பிஜி (LPG) சமையல் எரிவாயு இணைப்பை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டம் மே 1, 2016 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.
பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் முக்கிய நன்மைகள்
இலவச எல்பிஜி இணைப்பு கிடைக்கும். அதாவது, வைப்புத் தொகை செலுத்தாமலேயே எல்பிஜி இணைப்பு வழங்கப்படுகிறது. ஒரு எல்பிஜி இணைப்புக்காக அரசு ரூ. 1,600 (14.2 கிலோ சிலிண்டருக்கு) அல்லது ரூ. 1,150 (5 கிலோ சிலிண்டருக்கு) நிதியுதவி வழங்குகிறது. இதில், சிலிண்டருக்கான பாதுகாப்பு வைப்புத் தொகை, பிரஷர் ரெகுலேட்டர், எல்பிஜி குழாய் , கேஸ் சிலிண்டர் அட்டை எல்லாம் இந்த நிதியுதவிக்குள் அடங்கும். PMUY பயனாளிகளுக்கு முதல் எல்பிஜி நிரப்புதல் (ரீஃபில்) மற்றும் அடுப்பு (ஹாட் பிளேட்) இரண்டும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
மானியத் தொகை (Subsidy) Free lpg connection :
தற்போது, பயனாளிகளுக்கு ரூ. 300 மானியமாக ஆண்டுதோறும் 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மானியத் தொகை நேரடியாகப் பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
தகுதிக்கான நிபந்தனைகள்
பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எல்பிஜி இணைப்பு பெற, விண்ணப்பதாரர் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:
விண்ணப்பதாரர் பெண்ணாக இருக்க வேண்டும். 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்பத்தில் வேறு எந்த எல்பிஜி இணைப்பு இருக்கக் கூடாது. வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள (Below Poverty Line – BPL) குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். குறிப்பாக, பட்டியலினத்தவர் (SC) / பழங்குடியினர் (ST), அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) பயனாளிகள், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா பயனாளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) இத்திட்டத்தில் பயனடையலாம். தேயிலைத் தோட்டம் மற்றும் முன்னாள் தேயிலைத் தோட்டப் பழங்குடியினர், நதி தீவில் வசிக்கும் மக்கள் போன்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் தகுதியுடையவர்கள். புலம்பெயர்ந்தோர் குடும்பங்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
உஜ்வாலா 2.0 இணைப்பிற்காக விண்ணப்பிக்க, நீங்கள் அருகில் உள்ள எல்பிஜி விநியோகஸ்தரை அணுகலாம். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க https://www.pmuy.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்லவும். “Apply for New Ujjwala 2.0 Connection” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். இண்டேன், பாரத் கேஸ், அல்லது இந்துஸ்தான் பெட்ரோலியம் (Indane, Bharatgas, or HP Gas) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றி அல்லது சமர்ப்பித்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யலாம்.
தேவையான முக்கிய ஆவணங்கள்
விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை நகல், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள், ரேஷன் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், ரத்து செய்யப்பட்ட காசோலை இருக்க வேண்டும்.
மத்திய அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு முழு விவரம்
மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நாடு முழுவதும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வைப்புத்தொகை இல்லாத சமையல் எரிவாயு (எல்பிஜி) இணைப்பை வழங்குவதற்காக பிரதமரின் உஜ்வாலா திட்டம் எனப்படும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டம், மே 2016-ல் தொடங்கப்பட்டது. 01.11.2025 நிலவரப்படி, நாடு முழுவதும் இத்திட்டத்தில் சுமார் 10.33 கோடி இணைப்புகள் உள்ளன. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை முடித்து, நாட்டில் எல்பிஜி சேவையை விரிவுபடுத்தும் வகையில், 2025-26-ம் நிதியாண்டில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 லட்சம் கூடுதல் எல்பிஜி இணைப்புகளை வழங்க அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதற்கான தகுதி அளவுகோல்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக… Read More
செங்கல்பட்டு அருகே காட்டுப்பாக்கத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையம், 7 நாள் இலவச தேனீ வளர்ப்பு பயிற்சியை நடத்துகிறது. விஞ்ஞான… Read More
We are hiring!!!!!!!! “Bharti Airtel Ltd” is hiring for below positions. It’s time to build… Read More
இந்த மடிக்கணினி வழங்கும் பணியை டிசம்பர் மாதம் தொடங்கி, டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்களில் 10 லட்சம்… Read More
கிராம உதவியாளர் தேர்வுக்கான tnrd hall ticket நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்ய, அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, உங்கள் விண்ணப்ப… Read More
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு கொடுக்கப்போகும் டிசம்பர் பரிசு. முழு விவரம் தமிழ்நாடு அரசு முன்னாள்… Read More