நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் உள்ள போனிகபூர் அலுவலகத்தில் ‘வலிமை’ பட பூஜை எளிமையாக நடந்தது.
அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது.
இந்நிலையில், வலிமை படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா கூறுகையில், “வலிமை படக்குழுவினர் இதுவரை என்னை தொடர்பு கொள்ளவில்லை, அவர்கள் அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்” என்று கூறியுள்ளார்.
இவர் ஏற்கனவே விஜய்யின் மெர்சல் மற்றும் மகேஷ்பாபுவின் ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். அஜித் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான வாலி படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More