அமைப்பு சாரா தொழிலாளர்களின் வசதிக்காக இணையதளம் மூலம் நலவாரிய பதிவை புதுப்பிக்கும் பணியை அமைச்சர் நிலோபர் கபீல் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலன்களை பாதுகாப்பதற்காக தொழிலாளர் துறையின் கீழ் 17 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் இயங்கி வருகின்றன. கொரோனா வைரஸ் நோய் சமூக பரவலை தடுக்கும் பொருட்டும், தனி மனித இடைவெளியை பராமரிக்கும் பொருட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்வதற்கும், பதிவினை புதுப்பித்தல் செய்வதற்கும், கல்வி, மகப்பேறு, திருமணம், ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளின் கேட்பு மனுக்களை சமர்ப்பிப்பதற்கும் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகங்களுக்கு நேரடியாக செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.
இந்த சிரமத்தை போக்கும் விதமாக முதற்கட்டமாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே இணையதளம் மூலம் https://labour.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 17 வாரியங்களிலும் உறுப்பினர்களாக பதிவு செய்துகொள்ளும் வசதி 19.06.2020 முதல் ஏற்படுத்தப்பட்டு 20.07.2020 முதல் அடையாள அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது மேற்படி 17 வாரியங்களிலும் தங்களது பதிவினை புதுப்பித்தல் செய்து கொள்ளும் வசதியும், நலத்திட்ட உதவிகளுக்கான கேட்பு மனுக்களை சமர்ப்பிக்கும் வசதி, திருத்தம் மேற்கொள்ளும் வசதி, மாவட்டங்களுக்கு இடையே உறுப்பினர் பதிவினை மாற்றம் செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர்கபீல் நேற்று தலைமை செயலகத்தில் இணையதளம் மூலம் புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்களை சமர்ப்பிக்கும் வசதியினை துவக்கி வைத்து, அதன் அடையாளமாக புதுப்பித்தலுக்கான சான்றிதழ்களை 6 தொழிலாளர்களுக்கும், கல்வி, திருமணம் மற்றும் விபத்து மரண திட்ட உதவிகளை 4 தொழிலாளர்களுக்கும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முகமது நசிமுத்தின், தொழிலாளர் ஆணையர் முனைவர் இரா.நந்தகோபால், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர்(பொ) அ.யாஸ்மின் பேகம் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? குறிப்பாக சேவிங்ஸ் அக்கௌன்ட்… Read More
தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை… Read More
UPI Payments | நீங்கள் UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?.. ஆனால், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உங்கள் பேமெண்ட்… Read More
சென்னை: ஓய்வு காலத்துக்கு பிறகும், நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension… Read More
சென்னை: மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் நாடு முழுக்க பிரபலமாக இருக்கும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ்… Read More
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக்… Read More