சென்னை மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற இடங்களில் காலை 06.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை டீ கடை திறக்கலாம். என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் கரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 24/03/2020 முதல் அமலில் இருந்து வருகின்றது. கடந்த 02/05/2020 அன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின்படியும், பெருநகர சென்னை காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) கீழ்க்காணும் பணிகள், 11/05/2020 திங்கள்கிழமை முதல் குறிப்பிடப்பட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
1. அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் காலை 06.00 மணிமுதல் இரவு 07.00 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் (All Standalone and Neighbourhood Shops) காலை 10.30 மணி முதல் மாலை 06.00 மணிவரை செயல்படும்.
2. அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளை தவிர்த்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 06.00 மணிமுதல் இரவு 07.00 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் (All Standalone and Neighbourhood Shops) காலை 10.00 மணி முதல் இரவு 07.00 மணிவரை செயல்படும்.
3. சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) தேநீர்கடைகள் (Tea Shops) பார்சல் சேவைக்கு மட்டும், காலை 06.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. தேநீர் கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் தினமும், 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கடையில் வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ, ஏதும் உட்கொள்ள அனுமதி இல்லை. இதை முறையாக கடைபிடிக்க தவறும் தேநீர் கடைகள் உடனடியாக மூடப்படும்.
4. பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 06.00 மணிமுதல் மாலை 06.00 மணிவரை செயல்படும்.
5. பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காலை 06.00 மணிமுதல் இரவு 08.00 மணிவரை செயல்படும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பம்புகள் 24 மணிநேரமும் செயல்படும்.
6. பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை செயல்படும். சென்னையை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், அனைத்து தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் காலை 10.00 மணி முதல் இரவு 07.00 மணிவரை செயல்படும்.
அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதையும், போதுமான கிருமிநாசினியை பயன்படுத்தி பணிபுரிவதையும், பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (Standard Operation Procedures) தீவிரமாக கடைப்பிடிப்பதையும், கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையாளர்களும், காவல்துறையினரும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து முழுமையாக கடைபிடிக்கப்படும்”. இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More
வேலை வாய்ப்பு இணையதளம் விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.… Read More
The Arulmigu Subramanyaswamy Temple Recruitment Thiruttani invites applications for Driver posts on Contract basis. Eligible… Read More
நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்வகைதமிழ்நாடு அரசு வேலைகாலியிடங்கள்04பணியிடம்சென்னை, தமிழ்நாடுஆரம்ப தேதி25.09.2025கடைசி தேதி25.10.2025 தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு… Read More
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப இன்று… Read More
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More