டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா (69 கி.கி.,) வெண்கலப் பதக்கம் வென்றார். அரையிறுதியில் 0-5 என, துருக்கி வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.ஜப்பானில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பெண்களுக்கான குத்துச்சண்டை ‘வெல்டர் வெயிட்’ எடைப் பிரிவு (69 கிலோ) அரையிறுதியில் இந்தியாவின் லவ்லினா, நடப்பு உலக சாம்பியன் துருக்கியின் புசனெஸ் சர்மெனெலி மோதினர். இதில் லவ்லினா 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இது, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 3வது பதக்கமானது. ஏற்கனவே பளுதுாக்குதலில் மீராபாய் சானு (வெள்ளி), பாட்மின்டனில் சிந்து (வெண்கலம்) பதக்கம் வென்றிருந்தனர்.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More