நமக்கு இந்த கால்குலேசன் போட்டு, மண்டையை குடைந்து கொள்ளும் அளவுக்கு அறிவியல் அறிவு தேவை இல்லங்க. ஆனால் அன்றாட வாழ்வில் தினம் தினம் சந்தித்து வரும் ஒரு சில சுவாரஸ்யமான அறிவியல் உண்மைகளை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். உஷாரா பிழைக்க இந்த மாதிரியான அறிவு நிச்சயம் கை கொடுக்கும். சரி இப்போ நேரா பேச வந்த விசயத்துக்கு வருவோம். கடையில் ஒரு லிட்டர் எண்ணெய் பாக்கெட் வாங்கிருந்தால், கவருக்கு பின்னால் திருப்பி பார்த்து இருக்கீங்களா?
மேலே உள்ள படத்தில் வருவதைப்போல, ஒரு லிட்டர் என்று அச்சிடப்பட்டதற்கு அருகில், 910 கிராம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த இடத்தில் நம்முடைய தலைக்கு மேலே மணி அடிக்க வேண்டும்.
ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு பாக்கெட்டில் அடைத்து எடை போட்டால், சரியாக ஒரு கிலோ வரும். அதே ஒரு லிட்டர் எண்ணெயை எடைப்போட்டால் மட்டும் எப்படி 916 கிராம் மட்டும் வருகிறது? மீதி இருக்கும் அந்த 84 கிராம் எங்கே போச்சு? ஆச்சர்யமா இருக்குல.
அதாவது ஒவ்வொரு நீர்மதிற்கும் ஒரு பாகியல் தன்மை இருக்குமாம். தண்ணீரில் அதன் மதிப்பு 1 என இருப்பதால், ஒரு கிலோ நீரும், ஒரு லிட்டர் நீரும் ஒரே எடை வரும். அதுவே கடையில் வாங்கும் சமையல் எண்ணெய் என்றால், அதன் பாகியல் மதிப்பு 0.916 என்ற அளவில் இருக்குமாம். அதனால் தான் எடைப்போடும் போது 916 கிராம் வருகிறது. கடையில் வெறும் லிட்டர் கணக்கில் வாங்கும் போது நமக்கு இந்த வித்தியாசம் பெரிதாக தெரியாது.
டால்டா போன்று டின்களில் வாங்கும் போது, அவை எடை கணக்கில் கொடுக்கப்படும். கிலோகணக்கில் அளக்கப்படும் எண்ணெயை விட, லிட்டர் கணக்கில் வாங்கினால் விலை குறைவாக இருக்கும். எனக்கு தெரிந்த வரைக்கும் பேக்கரிகளில் பயன்படுத்தப்படும் டின்களில் அடைக்கப்பட்ட டால்டா கிலோ கணக்கில் வாங்கப்படுகிறது. அதே போல டின்களில் வாங்கப்படும் எண்ணெய் லிட்டர் கணக்கை அடிப்படையாக கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கிறது. 16 மையங்களில் ஆண்,… Read More
https://drive.google.com/file/d/1sutlDtmCKJ0g8JMbwe9GAyfBuKTU58gV/view?usp=sharing Website Link 1: https://application.tahdco.com/ Website Link 2 : https://fast.tahdco.com/ website Link 3 : http://tahdco.com/tamil/index.php… Read More
சென்னை: பலரும் பல வருடங்களாக சில பகுதிகளில் குடியிருந்து வருவார்கள். ஆனால் அவர்களுக்கு பட்டா கிடைத்திருக்காது. பட்டாவை பொறுத்தவரை மக்கள்… Read More
தமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை… Read More
சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை… Read More
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்.. தமிழ்நாடு… Read More