கூட்டுறவுத் துறையில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், பல்வேறு வகை கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொது மக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், கூட்டுறவுச் சங்கங்களால் வழங்கப்படும் சேவைகள் தொகுக்கப்பட்டு, ‘கூட்டுறவு’ (Kooturavu) என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
Kooturavu App Overview !! தமிழக அரசு கூட்டுறவுத் துறையில் புதிய அறிமுகம் | New App Launch !!
App Link : https://play.google.com/store/apps/details?id=com.coop.coop
இச்செயலி மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் பல்வேறு வகைக்கடன் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவும், பொது மக்கள் தங்களது கடன் தேவைக்கேற்ப, கடன் விண்ணப்பத்தினை இணைய வழியே சமர்ப்பித்திடும் வகையில், இச்செயலியில் கடன் விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலி மூலம் கடன் விண்ணப்பத்தில் உரிய விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம், கடன் விண்ணப்பங்கள் தொடர்புடைய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளுக்கு இணையவழி சமர்ப்பிக்கப்பட்டு, கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கடன் தகவல்களை தெரிந்து கொள்ளவும், கடன் விண்ணப்பத்தினை இணைய வழியில் சமர்ப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்செயலி மூலம், பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் இதர வகைக் கடன்களை கடன் விண்ணப்பம் என்ற பகுதியில் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த ‘கூட்டுறவு செயலி’ மூலம் பொதுமக்கள் அதிகபட்சமாக ரூ. 75 லட்சம் வரை வீட்டுக்கடன் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வட்டி விகிதம் 8.5 சதவீதமாகவும், கடன் தவணைக் காலம் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரையிலும் இருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
கூட்டுறவு வங்கி மூலம் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்டுறன பெறுவதற்கு கூகுள் பிளே ஸ்டோரில் ‘கூட்டுறவு’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். செயலியை திறந்து, வங்கி சேவை பிரிவை தேர்வு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து கடன் தகவல் பொத்தானை அழுத்த வேண்டும். அதில், பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால் நடை வளர்ப்பு கடன், அடமானக் கடன், குறுகிய கால கடன், நகைக் கடன், தனிநபர் கடன், ஓய்வூ தியர் கடன், வீட்டுக் கடன், மகளிர் தொழில் முனை வோர் கடன், எம்.எஸ்.எம்.இ. கடன், வேலைசெய்யும் பெண்களுக்கான கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சில்லரை வணிகக் கடன், சுயஉதவிக்குழு டன், தாட்கோ கடன், மனை வாங்கும் கடன்,கல்விக் கடன், வாகனக் கடன், மூத்த குடிமக்களுக்கான அடமானக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களின் விவரம் பட்டியலிடப்பட்டிருக்கும்.
இந்த பட்டியலில் கடன்களுக்கான உச்சவரம்பு, கடன் கால அளவு, வட்டி வீதம், கடனுக்கான தகுதி உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.
வீட்டுக் கடன் பெற விரும்புவோர் அதனை தேர்வு செய்ய வேண்டும். வீட்டுக்கடன் தேர்வு செய்யப்பட்ட உடன், கூட்டுறவு சங்கம் தொடர்பான (மாவட்டம், வட்டம், சங்கம்) விவரங்கள், வங்கி விவரங்கள், தனிநபர் விவரங்கள், முகவரி, முந்தைய கடன் விவரங்கள் போன்றவற்றை பதிவு செய்து, வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More
ICMR RECRUITMENT 2025 Read More