Advertisement
GOVT JOBS

கூட்டுறவு துறை மூலம் மேலும் 12 பெட்ரோல் நிலையங்கள்: செல்லூர் ராஜூ அறிவிப்பு

Advertisement

Advertisement

கூட்டுறவு துறை மூலம் மேலும் 12 பெட்ரோல் நிலையங்கள்: செல்லூர் ராஜூ அறிவிப்பு

  1. கூட்டுறவு துறை சார்பில் மேலும் 12 பெட்ரோல் நிலையங்கள் திறக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் இன்று தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள், முதலமைச்சரால், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம், கூட்டுறவுத்துறை அமைச்சரால் மானியகோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் முன்னேற்றம், கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 6,340 பணியிடங்களை நிரப்புதல், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில் கூட்டுறவுத்துறை அலுவலகங்களை அமைத்தல் ஆகியவை குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:

Advertisement

மாநிலத்தில் உள்ள 2,00,30,401 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, 1,98,12,817 குடும்ப அட்டைதாரர்களுக்கு (98.91%) எவ்வித புகார்களுக்கும் இடமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பை மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெறும் வகையில் சிறப்பாக வழங்கிய கூட்டுறவுத்துறையின் அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுக்கள்.

ரூ.48,860 கோடி பயிர்கடன்

Advertisement

அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சரின் அரசு, விவசாயிகளின் மேம்பாடு மற்றும் நலனில் அக்கறைகொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 2011 முதல் 15.01.2020 வரை 91,47,677 விவசாயிகளுக்கு ரூ.48,860.31 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2011 முதல் 2019 வரை ரூ.1,287.43 கோடி அளவிற்கு வட்டி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 2011 முதல் 31.12.2019 வரை வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தானியக் ஈட்டுக் கடனாக 1,97,464 விவசாயிகளுக்கு ரூ.2,450.15 கோடியும், பொது நகைக்கடனாக 31.12.2019 வரை 6,00,05,327 நபர்களுக்கு ரூ.2,30,371.79 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 2016-17 முதல் 15.01.2020 வரை, 31,43,970 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.7,238.74 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் தான் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக 18,56,401 விவசாயிகளுக்கு ரூ. 4,785.68 கோடி பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013-14 முதல் 31.12.2019 வரை காய்கறி பயிரிடும் 4,07,416 விவசாயிகளுக்கு ரூ. 3,282.25 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன்

நடப்பாண்டில் (2019-20) பயிர்கடன் குறியீடாக ரூ.10,000 கோடி முதலமைச்சரால் நிர்ணயிக்கப்பட்டு, 15.01.2020 வரை 9,89,055 நபர்களுக்கு ரூ.7,070.14 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், கூட்டுறவுத்துறை மூலம் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு 2011 முதல் 31.12.2019 வரை 60,727 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 247.37 கோடி அளவிற்கு வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2011 முதல் 31.12.2019 வரை சிறுவணிகர்களுக்கான சிறுவணிகக் கடனாக 15,41,279 பயனாளிகளுக்கு ரூ.1,866.66 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுய உதவி குழுக் கடனாக 3,71,144 குழுக்களுக்கு ரூ. 6,148.09 கோடியும், மகளிர் தொழில் முனைவோர் கடனாக 1,28,144 நபர்களுக்கு ரூ. 539.40 கோடியும், பணிபுரியும் மகளிர் கடனாக 83,835 மகளிர்க்கு ரூ.593.18 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் 23,485 முழுநேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 9473 பகுதிநேர நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 32,958 நியாயவிலைக் கடைகள் மூலம் 1.88 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

2421 நியாயவிலைக் கடைகள் திறப்பு

Advertisement

இதில் கடந்த 2011 முதல் 31.12.2019 வரை 675 முழுநேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 1,746 பகுதிநேர நியாயவிலைக்கடைகள் என மொத்தம் 2421 நியாயவிலைக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. 2011 முதல் 31.12.2019 வரை 1,229 முழுநேர கடைகள் மற்றும் 733 பகுதிநேர கடைகள் சேர்த்து மொத்தம் 1,968 நியாயவிலைக் கடைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில் தான் பொதுவிநியோகத்திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நியாயவிலைக் கடைகளில் இருப்பு விவரங்கள் உள்ளிட்ட பொதுவிநியோகத்திட்ட செயல்பாடுகள் அனைத்தும் கணினி மூலம் கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் தங்குதடையின்றி வழங்குவது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

ரூ.153 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

Advertisement

அம்மாவின் உன்னதத் திட்டமான பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 3 நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் உட்பட 79 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 26.01.2020 வரை 51,886 மெ.டன் காய்கறிகள் ரூ.153.29 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தரப்பு மக்களும் 20% வரை தள்ளுபடி விலையில் தரமான மருந்துகளை பெற்று பயனடையும் வகையில் 116 அம்மா மருந்தகங்கள் மற்றும் 172 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் 31.12.2019 வரை ரூ. 918.85 கோடி மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில் வெங்காயம் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் வெளிச்சந்தை விலையைவிட குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 27 .01.2020 வரை கூட்டுறவுச் சங்கங்கள் நடத்தும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் 309 மெட்ரிக் டன் வெங்காயம் ரூ.1.46 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

முதலமைச்சரின் ஆணையின்படி, தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்கள் சார்பாக அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளைத் திறக்க திட்டமிட்டதின் தொடர்ச்சியாக சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை 577 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் திறக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மேலும், இச்சிறப்பங்காடிகள் குடியிருப்புப் பகுதிகளில் அமையப் பெற்றுள்ளதால், பொதுமக்கள் பயன் பெறும் வகையில் 300 வகையான பொருட்கள் வெளிச்சந்தை விலையைவிட 5% குறைவாக விற்பனை செய்யப்படுகின்றது.

12 பெட்ரோல் நிலையம் திறப்பு

Advertisement

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 38 பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கும் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 12 பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கும் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

மாநில / மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், விற்பனையாளர், கட்டுநர், இரவு காவலர் உள்ளிட்ட 6,340 பணியிடங்களை நிரப்ப நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டு வருகிறது. விரைவில் இப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

Advertisement

தமிழகம் முழுவதும் கூட்டுறவு நிறுவனங்களில் யூரியா 26,068 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 17,080 மெட்ரிக் டன்னும், எம்.ஓ.பி 14,457 மெட்ரிக் டன்னும், காம்ளக்ஸ் உரம் 20,669 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 78,274 மெட்ரிக் டன் உரம் கையிருப்பில் உள்ளது. இதில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 16,891 மெட்ரிக் டன் உரம் கையிருப்பில் உள்ளது. கடந்த 2011 முதல் 31.12.2019 வரையிலான காலத்தில் ரூ.5,327.83 கோடி மதிப்பிலான 42,82,477 மெட்ரிக் டன் உரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இக்கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கு.கோவிந்தராஜ், தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர். இளங்கோவன், ஆலோசகர் இரா. கார்த்திகேயன், கூடுதல் பதிவாளர்கள் ஆர்.ஜி.சக்தி சரவணன், கே.ஜி.மாதவன், பா.பாலமுருகன், இரா.பிருந்தா, ம.அந்தோணிசாமி ஜான் பீட்டர், எஸ்.செந்தமிழ் செல்வி, வெ.லெட்சுமி, டாக்டர் டி.அமலதாஸ், கோ.செந்தில்குமார், எம்.முருகன், கேவி.எஸ்.குமார், ச.சுப்ரமணியன், ஆர்.இந்துமதி, ப.லோகநாதன். ந.மிருணாளினி மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement
admin

Recent Posts

இந்தியன் 2-வுக்கு நெட்பிளிக்ஸ் வைத்த செக்!.. 65 கோடி போச்சே!.. புலம்பும் லைக்கா!…

சில படங்கள் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும். பெரிய இயக்குனர் இயக்க பெரிய நடிகர் ஹீரோவாக நடிப்பார். பெரிய நிறுவனம் தயாரிக்கும்.… Read More

2 months ago

Vinesh Phogat likely to be disqualified, to miss Paris Olympic medal

Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More

2 months ago

50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester

50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More

3 months ago

IBPS CRP RRBs XIII Recruitment 2024

 IBPS invites Online applications for the recruitment of 9995 Officers (Scale-I, II & III) and… Read More

4 months ago

How to apply Chief Minister health insurance card in tamil pmjay cmchis health insurance card apply

💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More

6 months ago

AIASL Chennai Recruitment 2024 422 Handyman Posts; Apply Now

AIASL Chennai invites applications for recruitment of 422 Utility Agent – Ramp Driver, Handyman/ Handywoman… Read More

6 months ago