Advertisement
Categories: Service

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, வரும் 21ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் 45 உட்பட நாடு முழுதும் 1,256 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், சில பள்ளிகளில் மட்டுமே, 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை, ‘பால்வாடிகா’ என்ற கே.ஜி., முதல்நிலை வகுப்பில் சேர்க்கும் வசதி உள்ளது.

மற்ற பள்ளிகளில், 6 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை, முதல் வகுப்பில் சேர்க்கலாம்.

இந்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, நேற்று முன்தினம் துவங்கி, வரும் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு, https://balvatika.kvs.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, குழந்தையின் விபரங்கள், சான்றிதழ்களை பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வான மாணவர்களின் முதல் பட்டியல் 25, 26ம் தேதிகளிலும், இரண்டாம் பட்டியல் அடுத்த மாதம் 2ம் தேதியும், மூன்றாம் பட்டியல் 7ம் தேதியும் வெளியாக உள்ளது.

admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

5 hours ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

5 hours ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

9 hours ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

3 weeks ago