கொரோனா தடுப்பில் தேசியளவில் எந்த முதல்வர் பெஸ்ட்? யாரு வேஸ்ட்? நம்ம முதல்வரின் நிலை என்ன..? மக்களின் கருத்து.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை எட்டிவிட்டது. இதுவரை 1990 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 18 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தான் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அங்கு பாதிப்பு 19 ஆயிரத்தை கடந்து 20 ஆயிரத்தை நெருங்குகிறது. அதற்கடுத்தடுத்த இடங்களில் குஜராத், தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்கள் உள்ளன.
கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளை அனைத்து மாநிலங்களுமே தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன. கொரோனா தடுப்பில் தமிழக அரசு மிகச்சிறப்பாகவே செயல்படுகிறது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவை விட தமிழ்நாட்டில் இதுவரை அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 53 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. அதனால் அதிகமானோருக்கு டெஸ்ட் செய்து அதிகமான பாசிட்டிவ் கேஸ்களை கண்டறிய முடிகிறது.
டெல்லியிலும் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. ஆனாலும் தமிழ்நாட்டின் மருத்துவ உட்கட்டமைப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரே வெகுவாக புகழ்ந்துள்ளார். அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பாராட்டும் தெரிவித்திருந்தார். கேரளாவில் கொரோனா பாதிப்பு முழுமையாகவே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் மெட்ரோ பொலிடன் மாநகரங்களான டெல்லி, சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா ஆகிய மாநரங்களில், கொரோனாவுக்கு எதிரான அந்தந்த மாநில முதல்வர்களின் செயல்பாடுகள் எந்தளவிற்கு திருப்தியளிக்கின்றன என்று மெட்ரோ பொலிடன் நகர வாசிகளிடம், டைம்ஸ் நவ் மற்றும் ஆர்மேக்ஸ் மீடியா இணைந்து நடத்திய ஆய்வில், மக்களின் ஆதரவு எந்தளவிற்கு இருந்தது என்பது குறித்து பார்ப்போம்.
1. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் – 65%
டெல்லிவாசிகளில் 65% பேர் அரவிந்த் கேஜ்ரிவாலின் செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் சிறப்பாக உள்ளதாகவும் திருப்தியளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். டெல்லியில் 6542 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், டெல்லி மக்களிடம் கருத்து கேட்கப்பட்டதில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு பணிகளில் அரவிந்த் கேஜ்ரிவால் சிறப்பாக செயல்படுவதாக 65% பேர் தெரிவித்துள்ளனர். அரவிந்த் கேஜ்ரிவார்ல் அதிகமான ஆதரவை பெற்று இந்த சர்வேயில் முதலிடத்தில் இருக்கிறார்.
2. கர்நாடக முதல்வர் எடியூரப்பா – 56%
அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அடுத்து, முதல்வராக தனது செயல்பாட்டிற்கு அதிகமான ஆதரவை பெற்ற இரண்டாவது முதல்வர் எடியூரப்பா. பெங்களூருவாசிகளிடம் கருத்து கேட்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில், 56% பேர் எடியூரப்பாவின் கொரோனா தடுப்பு பணிகளை மெச்சியுள்ளனர். தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிராவுடன் ஒப்பிடுகையில் கர்நாடகாவில் பாதிப்பு மிகமிகக்குறைவு. கர்நாடகாவில் 753 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் வெறும் 169 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனா தடுப்பில் எடியூரப்பாவின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக 56 சதவிகித பெங்களூரு வாசிகள் ஆதரவளித்துள்ளனர்.
3. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் – 50
இந்த சர்வேயில், அதிகமான மக்கள் ஆதரவை பெற்ற முதல்வர்கள் பட்டியலில் மூன்றாமிடத்தில் இருப்பது தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ். தெலுங்கானாவில் 1133 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹைதராபாத் மக்களிடம் கருத்து கேட்டதில், 49% பேர் சந்திரசேகர் ராவின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளனர். அவரது கொரோனா தடுப்பு பணிகள் திருப்தியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மே 3ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று முதல் குரல் கொடுத்தவர் சந்திரசேகர் ராவ் தான். அதுமட்டுமல்லாமல் தேசியளவில் மே 17ம் தேதி வரை மட்டுமே மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்துள்ள நிலையில், சந்திரசேகர் ராவ், தெலுங்கானாவில் மே 29ம் தேதி வரை ஏற்கனவே நீட்டித்துள்ளார். அதேபோலவே மத்திய அரசிடமிருந்து நிதியை பெறுவதில் அழுத்தமளிப்பதிலும், அதை பொருட்படுத்தாத மத்திய அரசை கண்டிப்பதிலும் சந்திரசேகர் ராவ் தான் முதன்மையானவர்.
4. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி – 40%
தமிழ்நாட்டில் இதுவரை 6535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 பேர் மட்டுமே இறந்துள்ள நிலையில் 1827 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை விட இறப்பு விகிதம் மிக மிக குறைவு. தமிழக அரசு சிகிச்சை பணிகளையும் தடுப்பு பணிகளையும் சிறப்பாக எடுத்துவருகிறது. இந்நிலையில், சென்னை மக்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயில், 40% பேர் தமிழக முதல்வர் பழனிசாமியின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளனர்.
சென்னையில் 3330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதுடன், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களின் கஷ்டங்களை போக்குவதற்கான நடவடிக்கைகளையும் முதல்வர் பழனிசாமி எடுத்துவருகிறார். அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனை ஆய்வகங்களுக்கு அனுமதி பெற்று, தினமும் அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார் முதல்வர் பழனிசாமி. எனவே 40% மக்கள் முதல்வர் பழனிசாமியின் பணிகள் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
5. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே – 35%
இந்தியாவிலேயே அதிகமான பாதிப்பை கொண்ட மாநிலம் மகாராஷ்டிரா. பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்துவிட்டது. இறப்பிலும் மகாராஷ்டிரா தான் டாப். 731 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பை மக்கள் 35% பேர் மட்டுமே உத்தவ் தாக்கரேவின், கொரோனா தடுப்பு பணிகள் திருப்தியளிப்பதாக தெரிவித்துள்ளனர். 65% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு சமயத்தில் மும்பைக்கு புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்காததாலும், அவர்களுக்கு சரியான தகவலை அளிக்காததாலும் ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையத்தில் குவிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தனிமனித இடைவெளி காற்றில் பறந்த அந்த சம்பவம் நாட்டையே திரும்பி பார்க்கவைத்தது. மும்பையில் உழைக்கும் மக்கள் வாழும் பகுதியான அடர்ந்த குடிசைப்பகுதி தாராவியில் கொரோனா பரவியதால் அங்கு, அரசு மேற்கொள்ளும் தடுப்பு பணிகள் திருப்திகரமானதாக இல்லை.
6. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி – 6%
மேற்கண்ட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மேற்கு வங்கத்தில் பாதிப்பு பெரிதாக இல்லை. ஆனாலும் கொல்கத்தா மக்களிடம் எடுக்கப்பட்டுள்ள சர்வேயில், மம்தா பானர்ஜியின் செயல்பாடுகள் பெரும்பாலானோருக்கு திருப்தியாக இல்லை. வெறும் 6% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6000 ரூபாய் நிதியுதவியை 12,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நிதியமைச்சரிடம் விவசாயிகள்… Read More
இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற இதுவே சரியான நேரம்! இலவசமாக டி.வி.எஸ். ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் பெற… Read More
Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More
50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More
💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More
AIASL Chennai invites applications for recruitment of 422 Utility Agent – Ramp Driver, Handyman/ Handywoman… Read More