Advertisement
Categories: Uncategorized

கோலிக்கு வயசாகிப் போச்சு.. சச்சினின் 100 செஞ்சுரி ரெக்கார்டை அவரால்.. பிரையன் லாரா அதிரடி

மும்பை : சச்சின் டெண்டுல்கரின் 50 ஒருநாள் போட்டி சதங்கள் அடித்த சாதனையை சமீபத்தில் விராட் கோலி முறியடித்தார். ஆனால், அவரது 100 சர்வதேச சதம் அடித்த சாதனையை விராட் கோலியால் முறியடிக்க முடியுமா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

சமீபத்தில் இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் ஜாம்பவான் பிரையன் லாராவிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறிய பதில் கோலி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

விராட் கோலி தற்போது 80 சர்வதேச சதம் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 50, டெஸ்ட் போட்டிகளில் 29 மற்றும் சர்வதேச டி20யில் ஒரு சதம் அடித்துள்ளார். இதில் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் அடித்த 49 சதம் என்ற சாதனையை கோலி முறியடித்து இருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 51 சதம் அடித்துள்ளார். அதைத் தொடர் விராட் கோலிக்கு இன்னும் 22 சதங்கள் வேண்டும். டெஸ்ட் போட்டி என்று இல்லாமல் ஒட்டு மொத்தமாக சர்வதேச அளவில் 100 சதம் அடிக்க வேண்டும் என்றால் விராட் கோலிக்கு இன்னும் 20 சதங்கள் வேண்டும். அந்த 20 சதங்களை கோலி அடிப்பது மிகவும் கடினம் என கூறி இருக்கிறார் லாரா.

இது பற்றி பிரையன் லாரா பேசியது – “கோலிக்கு இப்போது என்ன வயது? 35 இல்லையா? அவர் 80 சதம் அடித்துள்ளார். இன்னும் 20 அடிக்க வேண்டும். அவர் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து சதம் அடித்தால் கூட சச்சின் சாதனையை தொட அவருக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் வேண்டும். அப்போது கோலிக்கு 39 வயது ஆகி விடும். இது கடினமான வேலை. மிகவும் கடினமான வேலை” என்றார்.

மேலும், “ஆனால், இதை யாராலும் உறுதியாக கூற முடியாது. கோலி, சச்சினின் 100 சதம் அடித்த சாதனையை முறியடித்து விடுவார் என கூறுபவர்கள் கிரிக்கெட்டின் லாஜிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 20 சதம் என்பது மிக அதிக தூரத்தில் உள்ளது. பல கிரிக்கெட் வீரர்கள் தங்களின் மொத்த கிரிக்கெட் வாழ்விலும் 20 சதம் அடிக்க மாட்டார்கள். அதனால், நான் கோலி அதை செய்வார் என கூற மாட்டேன்” என்றார் லாரா.

admin

Recent Posts

“வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை” – முழுமையான தகவல் (தமிழ்நாடு)

இந்த உதவித் தொகை மத்திய அரசு திட்டம் அல்ல; இது தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் நடத்தப்படும்… Read More

1 month ago

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி இனி சாத்தியமில்லை? ₹25,000 கோடி புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் என்றாலே மக்களின் முதல் எதிர்பார்ப்பு என்ன?👉 “5 சவரனுக்குக் கீழ் நகைக்கடன் தள்ளுபடி வருமா?” நகைக்கடன்… Read More

1 month ago

Indian Post Office Recruitment 2025

Indian Post Office invites Online applications for the recruitment of 28740 Gramin Dak Sevaks (GDS)… Read More

2 months ago

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

3 months ago