தமிழகத்தில் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் சலூன் கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இதனால் முடிதிருத்தும் தொழிலை நம்பி இருக்கும் 5 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். எனவே இவர்கள் முதல்வர்களுக்கு கடையை திறக்க அனுமதிக்கும் படி கோரிக்கை வைத்தனர்.
எனவே, முடிதிருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
மேலும், சென்னையில் சலூன் கடைகளை திறக்க அனுமதியில்லை. சென்னை, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சலூன் கடைகளை திறக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் இப்போது சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நகர் பகுதிகளிலும் நாளை முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்களை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஓட அனுமதி முக கவசம் சானிடைசர் கட்டாயம்
சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகிய வாகனங்களை ஓட்டுனர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில், 23-ந்தேதி (இன்று) முதல் (தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும்) இயக்க அனுமதிக்கப்படுகிறது.
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை இயக்க அனுமதி இல்லை. அப்பகுதிகளில் வாழும் ஆட்டோ, ரிக்ஷா ஓட்டுனர்களுக்கும் இவ்வாகனங்களை ஓட்ட அனுமதி இல்லை.
பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் சானிடைசர்களை ஓட்டுனர்கள் வைத்திருக்க வேண்டும். ஓட்டுனர்களும், பயணியர்களும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை தினமும் 3 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். ஓட்டுனர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவியும், வாகனத்தில் சுகாதாரத்தையும் பேண வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More